4,900 மெகாவாட் கொள்முதல் செய்ய டெண்டர்

4,900 மெகாவாட் கொள்முதல் செய்ய டெண்டர்
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தில் நவம்​பர் முதல் 2027 ஜனவரி வரை பண்​டிகைக் கால மின் தேவையை சமாளிக்க, வெளிச்​சந்​தையில் இருந்து குறுகிய கால அடிப்​படை​யில் மின்​சா​ரம் வாங்​கு​வதற்​கான 4-வது டெண்​டரை தமிழக மின்​சார வாரியம் வெளி​யிட்​டுள்​ளது. இதன் மூலம் நவ.1-ம் தேதி முதல் 2027 ஜன.31-ம் தேதி வரையி​லான 3 மாதங்​களுக்கு மின்​சா​ரம் வாங்​கப்​பட உள்​ளது.

இந்த கால​கட்​டத்​தில் ஒட்​டுமொத்​த​மாக 4,900 மெகாவாட் மின்​சா​ரத்​தைக் கொள்​முதல் செய்ய இலக்கு நிர்​ணயிக்​கப்​பட்​டுள்​ளது. குறிப்​பாக, மின் தேவை அதி​கம் இருக்​கும் என்று கணிக்​கப்​பட்​டுள்ள ஜனவரி மாதத்​தில் அதி​கபட்​ச​மாக 2,800 மெகாவாட் மின்​சா​ரம் கொள்​முதல் செய்​யத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் தற்​போது வடகிழக்கு பரு​வ​மழை தீவிரமடைந்துவரு​வதைத் தொடர்ந்து, தீபாவளி, கிறிஸ்து​மஸ், ஆங்​கிலப் புத்​தாண்டு, பொங்​கல் பண்​டிகைக் காலங்​களில் தமிழகத்​தின் மின் தேவையை சமாளிக்க முன்​கூட்​டியே இந்த நட​வடிக்​கைகள்எடுக்​கப்​பட்​டுள்​ளதாக மின்​வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

4,900 மெகாவாட் கொள்முதல் செய்ய டெண்டர்
“பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க வாய்ப்பில்லை” - அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in