“ஈரான் - அமெரிக்கா அமைதி உடன்பாட்டில் இஸ்ரேல் சூழ்ச்சியை இந்தியா கண்டிக்க வேண்டும்” - மு.வீரபாண்டியன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்

Updated on
1 min read

சென்னை: “அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் நோக்குடன் இஸ்ரேல் சூழ்ச்சியுடன் செயல்படுவது, மேற்காசியாவின் அமைதியை பாதிக்கும். இஸ்ரேலின் நடவடிக்கையை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்,” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளின் மத்தியஸ்த முயற்சியாலும், உலக சமாதான சக்திகளின் போராட்டத்தின் காரணமாகவும், அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதன் மூலம் மேற்காசியாவில் அமைதி திரும்பும் சூழலும், ஹார்முஸ் நீரிணை சரக்குக் கப்பல்களின் போக்குவரத்திற்குத் திறக்கப்பட்டு, உலக அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு, விலையேற்றம் பிரச்சினைகளுக்குத் தீர்வு பிறக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த அமைதி உடன்பாட்டின் தொடர்ச்சியாக, அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே ஸ்விட்சர்லாந்தில், பாகிஸ்தான், கத்தார் நாடுகளின் மத்தியஸ்துடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. அதை சீர்குலைக்கும் உள்நோக்கத்தோடு, ஈரானின் நட்பு நாடான, லெபனான் மீது இஸ்ரேல் ராணுவத் தாக்குதல் நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது.

அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் நோக்குடன் இஸ்ரேல் சூழ்ச்சியுடன் செயல்படுவது, மேற்காசியாவின் அமைதியை பாதிக்கும். லட்சக்கணக்கான இந்தியர்களும், தமிழர்களும் மேற்காசிய நாடுகளில் வேலை வாய்ப்பைப் பெற்று நாடு கடந்து பணியாற்றி வருகிறார்கள். மேற்காசியாவில் போர்ப் பதற்றம் நீடிப்பது இவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.

இந்நிலையில், அமைதி உடன்பாட்டை சீர்குலைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது” என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p><em>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்</em></p></div>
‘​கான் சிட்​டி’​யில் நடிக்க தயக்கம் இருந்​தது: அன்னா பென் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in