

தேமுதிக-வில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு 20-ம் தேதி முதல் நேர்காணல் நடக்க உள்ளது.
இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பி, விண்ணப்பம் அளித்த கழக நிர்வாகிகளுக்கான நேர்காணல், சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் வரும் 20-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறும். பிப்ரவரி 20-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர்; மதியம் 3 மணிக்கு மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு நடைபெறும்.
பிப்ரவரி 21-ம் தேதி காலை 10 மணிக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி; மதியம் 3 மணிக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் புதுச்சேரி மாநிலத்துக்கு நடைபெறும். பிப்ரவரி 22-ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை; மதியம் 3 மணிக்கு திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டைக்கு நேர்காணல் நடைபெறும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.