திமுக ஃபைல்ஸ் அவதூறு வழக்கு: டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை 3 மணி நேர குறுக்கு விசாரணை

சேது சமுத்திர திட்டம், சாராய ஆலை, கப்பல்கள் வாங்கியது, மு.க.அழகிரி குறித்து காரசார வாதம்
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் வந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் வந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.

Updated on
2 min read

சென்னை: ​தி​முக ஃபைல்ஸ் விவ​காரத்​தில் அண்​ணா​மலைக்கு எதி​ராக தொடரப்​பட்ட அவதூறு வழக்கில் சைதாப்​பேட்டை நீதி​மன்றத்​தில் ஆஜரான திமுக பொருளாளர் டி.ஆர்​.​பாலு​விடம், அண்​ணா​மலை 3 மணி நேர​மாக குறுக்கு விசா​ரணை நடத்​தி​னார். முன்​னாள் மத்​திய அமைச்​சர் மு.க.அழகிரி குறித்​தும் கார​சார விவாதம் நடந்​தது.

பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வ​ரான அண்​ணா​மலை ‘டிஎம்கே ஃபைல்​ஸ்’ என்ற பெயரில் திமுக அமைச்​சர்​கள் பலரது சொத்​துப்​பட்​டியல் குறித்த விவரங்​களை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்​ரலில் வெளி​யிட்டார். அதில் குறிப்​பாக திமுக பொருளாள​ரும், எம்​.பி.​யு​மான டி.ஆர்​.​ பாலு மற்​றும் அவரது மகனும், அமைச்​சரு​மான டி.ஆர்​.பி.​ராஜா மற்​றும் அவர்​களின் குடும்​பத்​தினருக்​குச் சொந்​த​மாக 21 நிறு​வனங்​கள் உள்​ள​தாக​வும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்​துகள் உள்​ள​தாக​வும் குறிப்​பிட்டிருந்​தார்.

அதையடுத்து அண்​ணா​மலைக்கு எதி​ராக டி,ஆர்​.​பாலு அவதூறு வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கு சைதாப்​பேட்டை 17-வது குற்​ற​வியல் நடு​வர் செந்​தில்​கு​மார் முன்​பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது ஆஜராகி​யிருந்த டி.ஆர்​.​பாலு​விடம், அண்​ணா​மலை 3 மணி நேர​மாக குறுக்கு விசா​ரணை செய்​தார்.

அப்​போது டி.ஆர்​.​பாலு​விடம், சேது சமுத்​திர திட்​டத்​தின் பெயரில் ஊழல் செய்​தது, சொந்​த​மாக கப்​பல்​கள் வாங்​கியது. தனி​யார் நிறு​வனங்​கள் மூலம் கருப்பு பணத்தை வெள்​ளை​யாக மாற்​றியது. அவருக்​குச் சொந்​த​மான 18 சொகுசு கார்​கள், மகன் நடத்​தும் கோல்​டன் வாட்ஸ் மது​பான ஆலை தொடர்​பாக அண்​ணா​மலை கேள்வி​களை எழுப்​பி, அதுதொடர்​பான ஆவணங்​களை​யும் தாக்​கல் செய்​தார்.

அப்​போது டி.ஆர்​.​பாலு சில கேள்வி​களுக்கு தெரி​யாது என்​றும், பல கேள்வி​களுக்கு சரியல்ல என்​றும் பதிலளித்​தார். சாராய ஆலை தொடர்​பான கேள்விக்கு அது ரசாயண ஆலை என்​றும், தான் அதில் ஒரு பங்​கு​தா​ரர் மட்​டுமே என்​றும் டி.ஆர்​.​பாலு தெரி​வித்​தார். அப்போது இருவருக்கும் இடையே நடந்த காரசார வாதம் வருமாறு:

அண்​ணா​மலை: சேது சமுத்​திர திட்​டம் மூல​மாக கப்​பல் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​ச​ராக பதவி வகித்​த​போது அதி​காரத்தை தவறாக பயன்​படுத்தி 10 கப்​பல்​களை நீங்​கள் வாங்கி ஊழல் செய்​துள்​ள​தாக அழகிரி கடந்த 2014-ம் ஆண்டு ஒரு பேட்​டி​யில் தெரி​வித்​துள்​ளாரே. அது உண்​மை​யா, அழகிரி கூறியது தவறு என்​றால் அதற்​காக அவர் மீது ஏன் அவதூறு வழக்கு தொடர​வில்லை என்​றார்.

டி.ஆர்​.​பாலு: அழகிரிக்​கோ, உங்​களுக்கோ சேது சமுத்​திர திட்​டம் குறித்து எது​வும் தெரிய​வில்​லை. சேது சமுத்​திர திட்​டம் தமிழகத்​தின் 150 ஆண்​டு​கால கனவுத்​திட்​டம். அதற்​கும் கப்​பல்​கள் வாங்​கியதற்​கும் என்ன சம்​பந்​தம்?

அண்​ணா​மலை: அப்படி என்றால் அழகிரி உங்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் பேட்டி கொடுத்தாரா?

டிஆர் பாலு: அழகிரி உள்​நோக்​கத்​துடன் பேட்டி கொடுத்​த​தாக நான் கருத​வில்​லை. ஒரு​வேளை அழகிரி பேசி​யதை திரித்து கூறி​யிருக்​கலாம். திட்​டம் குறித்து சரி​யாமல் புரிந்து கொள்​ளாமல் குற்​றம் சாட்​டக்​கூ​டாது. நான் 10 கப்​பல்​களை வாங்​க​வில்​லை. 2 மீன்​பிடி கப்​பல்​களைத் தான் வாங்​கி​யுள்​ளேன். உண்மை தெரி​யாமல் ‘அரை வேக்​காட்​டுத்​தன​மாக’ பேசினால் அதற்​காக நடவடிக்கை எடுக்க முடி​யாது. அதை வைத்துக்​கொண்டு ‘அரைவேக்​காட்​டுத்​தன​மாக’ கேள்வி​கள் கேட்​ப​தை ஏற்க முடி​யாது.

அண்​ணா​மலை: உங்​கள் மீதான ஊழல் குற்​றச்​சாட்​டின் காரண​மாகவே 2009-ல் மத்​திய அமைச்​சர் பதவி கொடுக்​கப்​பட​வில்லை என அழகிரி கூறி​யுள்ளார். நீங்​கள் கப்​பல்​கள் வாங்​கி​யுள்​ள​தாக அழகிரி மட்​டுமல்ல சுப்​ரமணி​யன் சுவாமி, ஜெயலலிதா போன்​றவர்​களும் குற்​றம் சாட்​டி​யுள்​ளனர். அவர்​கள் மீதும் ஏன் வழக்கு தொடர​வில்​லை. ஒரத்தநாடு அருகேயுள்ள வடசேரி கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்.9-ஐ ஏன் கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர் என உங்களுக்குத்  தெரியுமா?.

டி.ஆர்​.​பாலு: எனக்கு ஏன் அமைச்​சர் பதவி தரவில்லை என்​பது குறித்து அப்​போதைய பிரதமர் மன்​மோகன்​சிங்​கிடம் தான் கேட்க வேண்​டும். ஜெயலலி​தா​வின் அறி​யாமையை நான் பெரி​தாக எடுத்​துக்​கொள்​ள​வில்​லை. வடசேரி கிராம மக்கள் கருப்பு தினம் அனுசரிப்பது குறித்தும் எனக்கு எதுவும் தெரியாது. அது நான் மட்டுமே சார்ந்த பிரச்சினை அல்ல. நீங்கள் கூட (அண்ணா​மலை​யிடம்) ரூ. 5 லட்சம் மதிப்​பில் கைக்கடி​காரம் அணிந்து கொண்​டு, உங்​கள் மனை​வி​யின் பெயரில் சொத்​துகளை வாங்கி ஊழல் குற்​றச்​சாட்​டில் ஈடு​பட்​ட​தால்​தான் உங்களது மாநிலத் தலை​வர் பதவி பறிக்​கப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. அது உண்​மையா?

அண்​ணா​மலை: என் மனைவி என்ன படித்துள்ளார். எவ்வளவு சம்பாதிக்கிறார். எந்த முன்னணி எம்என்சி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நாங்கள் இருவரும் அந்த விவசாய நிலத்தை வாங்க வருமான வரி செலுத்தி இருக்கிறோம் என்பதும், அதற்காக ரூ. 2.50 கோடி கடன் பெற்றுள்ளோம் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

டிஆர் பாலு: அதை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்​லை.

அண்​ணா​மலை: இன்று நீங்கள் நீதிமன்றத்துக்கு வரபயன்படுத்திய சொகுசு வால்வோ கார் உங்கள் மகனின் கோல்டன் வாட்ஸ் மதுபான ஆலைக்குச் சொந்தமானது என்பது சரியா?

டி.ஆர்​.​பாலு: பொதுவாக நான் எங்கு சென்றாலும் பயன்படுத்தும் கார் எந்த வகை என்பதை கவனிப்பதில்லை. குடும்பத்தினர் ஏற்பாடு செய்யும் கார்களில் பயணிப்பேன். அவ்வளவுதான்.

அண்ணாமலை: பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள என் மீதும், எனது மனைவி மீதும் அபாண்டமாக, உள்நோக்கத்துடன் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியதற்காக உங்கள் (டி.ஆர்.பாலு) மீது புதிதாக அவதூறு வழக்கு ஒன்றைத் தொடருவேன். இவ்வாறு விவாதம் நடந்தது.

இந்த குறுக்கு விசா​ரணை நேற்று நிறைவடை​யாத​தால் வழக்கை நீதிபதி வரும் ஏப்​.7-க்கு தள்ளி வைத்​தார். அன்​றைய தின​மும் டி.ஆர்​.​பாலு​விடம் அண்​ணா​மலை குறுக்கு விசா​ரணை நடத்​து​வார் என தெரிவிக்​கப்​பட்​டது. இதே​போல அண்​ணா​மலை மீது ஆர்​.எஸ்​.​பாரதி தொடர்ந்த வழக்கு வி​சா​ரணை வரும் மார்ச் 10-க்கு தள்ளி வைக்​கப்​பட்​டுள்​ளது. டி.ஆர்​.​பாலு தரப்​பில் வழக்​கறிஞர் ரிச்​சர்ட்​ஸன் வில்​சனும்​, அண்​ணா​மலை தரப்​பில்​ வழக்​கறிஞர்​கள்​ ஆர்​.சி.​பால்​க​னக​ராஜ், ஏ.குமரகுரு ஆகியோரும்​ ஆஜ​ராகியிருந்​தனர்​.

<div class="paragraphs"><p>சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் வந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.</p></div>
சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in