துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட குரூப்-1 பதவிகளுக்கு ஏப். 15, 16-ல் நேர்முகத் தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி
Updated on
1 min read

சென்னை: துணை ஆட்​சி​யர், டிஎஸ்பி உள்​ளிட்ட குரூப்-1 பதவி​களுக்கு ஏப்​ரல் 15, 16 ஆகிய தேதி​களில் நேர்​முகத் தேர்வு நடை​பெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக டிஎன்​பி எஸ்சி செய​லா​ளர் மற்​றும் தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் (பொறுப்​பு) பானோத் ம்ரு​கேந்​தர்​லால் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: குரூப்-1 பதவி​களின் (துணை ஆட்​சி​யர், டிஎஸ்​பி) நேரடி நியமனத்​துக்​கான முதன்​மைத் தேர்​வு​கள் டிசம்​பரில் நடை​பெற்​றன. அத்​தேர்வை 1,568 பேர் எழு​தினர். எழுத்​துத் தேர்வு மதிப்​பெண், இட ஒதுக்​கீடு, காலி​யிடங்​கள் உள்​ளிட்ட விதி​களின்​படி அசல் சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் நேர்​முகத் தேர்​வுக்கு 160 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

அவர்​களுக்​கான சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் நேர்​முகத் தேர்வு ஏப்​ரல் 15 மற்​றும் 16-ம் தேதி நடை​பெறும். எனவே, தேர்​வர்​கள் தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்தை தொடர்ந்து பார்​வை​யிடு​மாறு அறி​வுறுத்​தப்​படு​கிறார்​கள். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

இந்த தேர்வு மூல​மாக துணை ஆட்​சி​யர், டிஎஸ்​பி, வணிக வரி​கள் உதவி ஆணை​யர், ஊரக வளர்ச்சி உதவி இயக்​குநர், மாவட்ட வேலை​வாய்ப்பு அலு​வலர், தொழிலா​ளர் நல உதவி ஆணை​யர் ஆகிய பதவி​களில் 78 காலி​யிடங்​கள் நிரப்​பப்பட உள்ளன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

டிஎன்பிஎஸ்சி
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: விண்ணப்பப் பதிவு ஏப்.20-ம் தேதி தொடங்குகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in