தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: விண்ணப்பப் பதிவு ஏப்.20-ம் தேதி தொடங்குகிறது

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: விண்ணப்பப் பதிவு ஏப்.20-ம் தேதி தொடங்குகிறது
Updated on
1 min read

சென்னை: ஆர்​டிஇ திட்​டத்​தின் கீழ், தனி​யார் பள்​ளி​களில் இலவச மாணவர் சேர்க்​கைக்​கான விண்​ணப்​பப் பதிவு வரும் 20-ம் தேதி முதல் தொடங்​கு​கிறது.

இலவச கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி (ஆர்​டிஇ), தனி​யார் பள்​ளி​களில் 25 சதவீத இடங்​களில் ஏழைக் குழந்​தைகள் சேர்க்​கப்​படு​வார்​கள். மாநிலம் முழு​வதுள்ள 7 ஆயிரத்​துக்​கும் மேலான தனி​யார் பள்​ளி​களில் 1 லட்​சம் இடங்​கள் உள்​ளன. இந்த திட்​டத்​தில், எல்​கேஜி அல்​லது 1-ம் வகுப்​பில் சேருபவர்​கள் 8-ம் வகுப்பு வரை கட்​ட​ணம் செலுத்​தாமல் இலவச​மாக படிக்​கலாம். தமிழகத்​தில் 2013-ல் அமலான இந்த ஆர்​டிஇ திட்​டத்​தின் கீழ், இது​வரை சுமார் 5.7 லட்​சம் குழந்​தைகள் தனி​யார் பள்​ளி​களில் படித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், வரும் கல்​வி​யாண்டு (2026-27) இலவச மாணவர் சேர்க்​கைக்​கான இணை​ய​வழி விண்​ணப்​பப் பதிவு வரும் 20 முதல் மே 18-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதற்​கான அறி​விப்பை தனி​யார் பள்​ளி​கள் இயக்​குநரகம் வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, ஆர்​டிஇ திட்​டத்​தின் கீழ் சிறு​பான்மை அந்​தஸ்து பெறாத அனைத்து தனி​யார் நர்​சரி, பிரைமரி, மெட்​ரிக், ஐசிஎஸ்இ மற்​றும் சிபிஎஸ்இ பள்​ளி​களில் இலவச​மாக மாணவர் சேர்க்கை பெற முடி​யும். இந்த திட்​டத்​தின் கீழ், வாய்ப்பு மறுக்​கப்​பட்ட நபர்​கள் மற்​றும் பொருளா​தா​ரத்​தில் நலிந்த பிரி​வினர் விண்​ணப்​பிக்க வேண்​டும்.

வாய்ப்பு மறுக்​கப்​பட்ட பிரி​வில் ஆதர​வற்​றவர்​கள், எச்​ஐ​வி​யால் பாதிக்​கப்​பட்​ட​வர், 3-ம் பாலினத்​தவர், மாற்​றுத் திற​னாளி​கள், துப்​புர​வுத் தொழிலா​ளர்​களின் குழந்​தைகள் ஆகியோரின் விண்​ணப்​பங்​கள் குலுக்​கல் நடத்​தாமல் முன்​னுரிமை அடிப்​படை​யில் தேர்வு செய்​யப்​படும். நலிந்த பிரி​வினர் ஆண்டு வரு​மானம் ரூ.2 லட்​சத்​துக்கு குறை​வாக இருக்க வேண்​டும்.

விண்​ணப்​ப​தா​ரர்​கள் வரு​மானம், இருப்​பிடம், சாதிச் சான்​றிதழ்​களை சமர்​பிப்​பது அவசி​ய​மாகும். பெற்​றோர்​கள் rte.tnschools.gov.in எனும் வலைத்​தளம் வழி​யாக விண்​ணப்​பிக்​கலாம். ஒரு பெற்​றோர் அதி​கபட்​சம் தங்​கள் இருப்​பிடத்​துக்கு அருகே உள்ள 5 பள்​ளி​களில் விண்​ணப்​பிக்​கலாம். பள்​ளி​யில் நிர்​ண​யித்த இடங்​களை​விட அதிக விண்​ணப்​பம் வந்​தால் வெளிப்​படை​யான குலுக்​கல் முறை​யில் மாணவர்​கள் தேர்வு செய்​யப்​படு​வார்​கள் என்று அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: விண்ணப்பப் பதிவு ஏப்.20-ம் தேதி தொடங்குகிறது
குஜராத்தில் ரூ.3,300 கோடியில் செமி கண்டக்டர் ஆலை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in