​திருவண்ணாமலை கோயிலில் 109 பணியிடம்: நேர்முகத் தேர்வு ரத்து

​திருவண்ணாமலை கோயிலில் 109 பணியிடம்: நேர்முகத் தேர்வு ரத்து
Updated on
1 min read

சென்னை: திரு​வண்​ணா​மலை அருணாசலேசுவரர் கோயி​லில் கடந்த ஆட்​சி​யில் நடை​பெற்ற அரசு பணி நியமனங்​களில் முறை​கேடு நடந்​துள்​ள​தாக புகார் எழுந்​தது.

இந்நிலையில் அறநிலையத்​துறை ஆணையர் டி.ஜி.வினய் அனுப்​பிய சுற்​றறிக்கை: திருவண்ணாமலை அருணா சலேசுவரர் கோயிலில் அங்​கீகரிக்​கப்​பட்ட 466 பணி​யிடங்​களில் 109 பணி​யிடங்​களை நிரப்ப விளம்​பரம் செய்து நியமிக்க அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், தற்​போது கோயி​லில் அறங்​காவலர் குழுபதவிக்காலம் முடிவுற்​ற​தா​லும், நிர்​வாக காரணங்​களுக்​காக​வும், கோயி​லில் 109 காலிபணி​யிடங்​களை நிரப்ப வழங்​கப்​பட்ட நேர்காணல் அனு​மதி ரத்து செய்​யப்​படு​கிறது.

​திருவண்ணாமலை கோயிலில் 109 பணியிடம்: நேர்முகத் தேர்வு ரத்து
“முட்டாள்தனமான விதிமீறல்!” - ஹார்முஸ் ஜலசந்தியில் ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு ட்ரம்ப் கடும் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in