உள் தமிழகத்தில் 21-ம் தேதி வரை 5 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

உள் தமிழகத்தில் 21-ம் தேதி வரை 5 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தின் உள் மாவட்​டங்​களில் இன்​று​முதல் 21-ம் தேதி வரை அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்​தை​விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் உயரக்​கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

தமிழகத்​தில் இன்று (ஜூலை 18) மேற்​குத் தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் மற்​றும் வட கடலோர தமிழகத்​தி​லும், 19-ம் தேதி மேற்​குத் தொடர்ச்சி மலை மாவட்​டங்​களி​லும் ஓரிரு இடங்​களில் பலத்த காற்​றுடன் கூடிய மித​மான மழை பெய்​யக்​கூடும். இதர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் லேசான மழை பெய்​யக்​கூடும்.

இன்​று​முதல் 21-ம் தேதி வரை உள்​தமிழகத்​தில் அதி​கபட்ச வெப்​பநிலை ஒருசில இடங்​களில் வழக்​கத்​தை​விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை அதி​கரிக்க வாய்ப்​புள்​ளது. சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். மாலை அல்​லது இரவு நேரங்​களில் நகரின் ஒருசில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் கூடிய லேசான அல்​லது மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. இத்தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உள் தமிழகத்தில் 21-ம் தேதி வரை 5 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு
ஹைட்ரஜன் ரயிலை தொடங்கினார் மோடி: 75 நிலையங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in