அணுசக்தி மின்திட்டங்களை செயல்படுத்த இந்திய அணுசக்தி கழகம் - என்எல்சி ஒப்பந்தம்

அணுசக்தி மின்திட்டங்களை செயல்படுத்த இந்திய அணுசக்தி கழகம் - என்எல்சி ஒப்பந்தம்
Updated on
1 min read

கடலூர்: அணுசக்தி திட்​டங்​களைச் செயல்படுத்த, இந்​திய அணுசக்தி கழகத்​துடன் என்​எல்சி இந்​தியா நிறு​வனம் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது. 700 மெகா​வாட் திறன் கொண்ட உள்​நாட்டு அழுத்​தப்​பட்ட கனநீர் அணு உலை அடிப்​படையி​லான அணுசக்தி உலைகளை மேம்​படுத்​து​வதற்​காக இந்த ஒப்​பந்​தம் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இதற்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் நேற்று முன்​தினம் (மே 25) என்​எல்சி இந்​தியா நிறு​வனத்​தின் தலை​வர் மற்​றும் நிர்​வாக இயக்​குநர் பிரசன்ன குமார் மோட்​டு​ பள்​ளி, இந்​திய அணுசக்தி கழகத்​தின் தலை​வர் மற்​றும் நிர்​வாக இயக்​குநர் புவன் சந்​திர பதக் மற்​றும் இரு நிறு​வனங்​களின் செயல்​பாட்டு இயக்​குநர்​கள் முன்​னிலை​யில் நெய்​வேலி​யில் கையெழுத்​தானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்​எல்சி இந்​தியா நிறு​வனத்​தின் மின்​துறை இயக்​குநர் எம்.வெங்​க​டாச்​சலம் மற்​றும் இந்​திய அணுசக்தி கழகத்​தின் தொழில்​நுட்​பப் பிரிவு இயக்​குநர் ராஜேஷ் ஆகியோர் கையெழுத்​திட்​டனர்.

இந்த ஒத்​துழைப்​பானது, முன்​மொழியப்​பட்ட கூட்டு முயற்சி கட்​டமைப்​பின் மூலம், இந்​திய அணுசக்தி கழகத்​தின் தற்​போதைய மற்​றும் வரவிருக்​கும் 700 மெகா​வாட் அழுத்​தப்​பட்ட கனநீர் அணு உலைத் திட்​டங்​களில் முதலீட்டு வாய்ப்​பு​களை​யும் வழங்​கு​கிறது.

இந்த நிகழ்​வில் பேசிய என்​எல்சி இந்​தியா நிறு​வனத்​தின் தலை​வர் மற்​றும் நிர்​வாக இயக்​குநர் பிரசன்ன குமார் மோட்​டு​பள்ளி கூறிய​தாவது: இந்​திய அணுசக்தி கழகத்​துட​னான இந்​தக் கூட்​டாண்மை ஒரு வரலாற்​றுச் சிறப்​புமிக்க மைல்​கல் ஆகும்.

நாட்​டின் நீண்​ட​கால எரிசக்தி பாது​காப்பை உறுதி செய்​வ​தி​லும், நிகர பூஜ்ய கார்​பன் உமிழ்வை அடைவதற்​கான தேசத்​தின் உறு​திப்​பாட்​டுக்கு ஆதர​வளிப்​ப​தி​லும் அணுசக்தி ஒரு முக்​கியப் பங்​காற்​றும்.

இந்​தக் கூட்டு முயற்​சி​யானது, மின்​சா​ரத் துறை​யில் என்​எல்சி இந்​தியா நிறு​வனத்​துக்கு இருக்​கும் விரி​வான அனுபவத்​தை​யும், அணுசக்தி துறை​யில் இந்​திய அணுசக்தி கழகத்​தின் நிரூபிக்​கப்​பட்ட நிபுணத்​து​வத்​தை​யும் ஒன்​றிணைத்​து, நாட்​டுக்கு நம்​பக​மான, நீடித்த மற்​றும் சுற்​றுச்​சூழலுக்கு உகந்த அடிப்​படை மின் திட்​டங்​களின் வளர்ச்​சிக்கு நிச்சயமாக வழி​வகுக்​கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இவ்​வாறு தெரி​வித்​தார்.

அணுசக்தி மின்திட்டங்களை செயல்படுத்த இந்திய அணுசக்தி கழகம் - என்எல்சி ஒப்பந்தம்
அதிமுக எம்எல்ஏக்களை தவெகவில் இணைப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்றது அல்ல: திருமாவளவன், மு.வீரபாண்டியன், பெ.சண்முகம் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in