இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ இன்று விண்ணில் பாய்கிறது

இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ இன்று விண்ணில் பாய்கிறது
Updated on
1 min read

சென்னை: இந்​திய விண்​வெளி வரலாற்​றில் புதிய மைல்கல்​லாக, உள்​நாட்டு தனி​யார் நிறு​வனத்தால் முழு​மை​யாக வடிவ​மைக்​கப்​பட்ட முதல் ஆர்பிட்​டல் வகை ராக்​கெட்​டான ‘விக்​ரம்​-1’ இன்று (ஜூலை 18) விண்​ணில் ஏவப்​படு​கிறது.

ஆந்​திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டா​வில் உள்ள சதீஷ் தவான் விண்​வெளி மையத்​தின் முதலா​வது ஏவுதளத்​தில் இருந்து இன்று காலை 11:30 மணிக்கு இந்த வரலாற்று சிறப்​புமிக்க சோதனை மேற்​கொள்​ளப்​பட​வுள்​ளது.

ராக்​கெட் ஏவுதலுக்கான இறு​திக்​கட்ட தயாரிப்​பு​கள் நிறைவடைந்​து, தரைக் ​கட்​டுப்​பாட்டு மையத்​துட​னான தகவல் தொடர்பு சோதனை​கள் மற்​றும் ரேடார் கண்​காணிப்பு சோதனை​கள் அனைத்​தும் வெற்​றிகர​மாக முடிந்​துள்ள நிலை​யில், ராக்​கெட்​டின் அனைத்து நிலைகளும் ஒருங்​கிணைக்​கப்​பட்​டு, ஏவுதளத்​தில் நிறுத்​தப்​பட்​டுள்​ளது. இதற்​கான 36 மணி நேர கவுண்​டன் நேற்று முன்​தினம் தொடங்​கியது.

‘மிஷன் ஆகமன்’

‘ஸ்​கைரூட் ஏரோஸ்​பேஸ்’ என்ற தனி​யார் நிறு​வனம் தயாரித்​துள்ள இந்த ராக்கெட்டின் பயணத்​துக்கு ‘மிஷன் ஆகமன்’ என்று பெயரிடப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யாவை சேர்ந்த தனி​யார் நிறு​வனம், தான் சொந்​த​மாக உரு​வாக்​கிய ஏவு​தளத்தை பயன்​படுத்தி செயற்​கைக்​கோளை விண்​வெளி சுற்​றுப்​பாதை​யில் நிலை நிறுத்த முயற்​சிப்​பது இதுவே முதல் முறை​யாகும்.

இந்த பயணத்​தின் நோக்​கம் ஒர் செயற்​கைக்​கோளை மட்​டும் விண்​ணில் செலுத்​து​வது அல்ல. மாறாக, ராக்​கெட்​டின் அனைத்து நிலைகளும் விண்​வெளி பயணத்​தின் போது எவ்​வாறு செயல்​படு​கின்றன என்​பதை நேரடி​யாக மதிப்​பீடு செய்​வதற்​கான தரவு​களை சேகரிப்​பதே இந்த சோதனை​யின் பிர​தான இலக்​காகும்.

350 கிலோ வரை எடையி​லான சிறிய மற்​றும் நடுத்தர அளவி​லான செயற்​கைக்​கோள்​களை 450 கிமீ தூரத்​தில் பூமி​யின் தாழ்​வான சுற்​றுப்​பாதை​யில் நிலைநிறுத்​தும் வகை​யில்​ இந்​த ராக்​கெட்​ வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ இன்று விண்ணில் பாய்கிறது
ஊத்தங்கரை எம்எல்ஏ-விடம் குதிரை பேரம்: சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in