

நியூயார்க்: ஐ.நா. சபைக்கான இந்திய தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: நியூயார்க்கில் நடைபெற்ற தேர்தலில், சர்வதேச கடல் சட்ட தீர்ப்பாயத்தின் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிமல் படேலுக்கு வாழ்த்துகள். அவரது இந்தத் தேர்வு, கடல் சட்டங்கள் மீதான இந்தியாவின் நீண்டகால அர்ப்பணிப்பை காட்டுகிறது. அவருக்கு ஆதரவு அளித்த நாடுகளுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளது.
பிமல் படேல் தற்போது ஐ.நா. சர்வதேச சட்ட ஆணையத்தின் உறுப்பினராகவும் ராஷ்டிரிய ரக் ஷா பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பொது சர்வதேச சட்டப் பேராசிரியராகவும் உள்ளார். மேலும் பிரதமர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார்.