20 நாடுகளைச் சேர்ந்த 1000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்திய சர்வதேச கல்வி உச்சி மாநாடு சென்னையில் தொடங்கியது

20 நாடுகளைச் சேர்ந்த 1000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்திய சர்வதேச கல்வி உச்சி மாநாடு சென்னையில் தொடங்கியது
Updated on
1 min read

சென்னை: இங்​கிலாந்​து, அமெரிக்​கா, ஆஸ்​திரேலியா உள்பட 20 நாடு​களைச் சேர்ந்த 1000 பிர​தி​நி​தி​கள் பங்​கேற்​கும் இந்​திய சர்​வ​தேச கல்வி உச்சி மாநாடு சென்​னை​யில் நேற்று தொடங்​கியது.

தமிழக அரசின் டிட்கோ நிறு​வனம், இங்​கிலாந்து நாட்​டின் தேசிய இந்​திய மாணவர் மற்​றும் பழைய மாணவர் சங்​கம், கிழக்கு இங்​கிலாந்து பல்​கலைக்​கழகம் இணைந்து இந்​திய சர்​வ​தேச கல்வி உச்சி மாநாட்டை சென்​னை​யில் 2 நாட்​கள் நடத்​துகின்​றன.

கலை​வாணர் அரங்​கில் நடை​பெறும் இந்த மாநாட்டை தென்​சென்னை தொகுதி எம்​.பி தமிழச்சி தங்​க​பாண்​டியன் நேற்று தொடங்கிவைத்து பேசி​யதாவது: சமத்​து​வத்​துக்​கும் சமூகநீ​திக்​கும் அடிப்​படை கல்வி.

அதிகார அமைப்பை நோக்கி கேள்வி எழுப்​பும் தைரி​யத்தை தரக்​கூடிய சாதனம் கல்விதான். பழங்​காலம் தொட்டே அறி​வியல் சிந்​தனையை​யும், பகுத்​தறிவை​யும், கேள்வி கேட்​ப​தை​யும் நாம் வலி​யுறுத்தி வரு​கிறோம்.

முதல்​வரின் காலை உணவு திட்​டத்தை கனடா உள்பட பல்​வேறு நாடு​கள் பின்​பற்​றத் தொடங்​கி​யுள்​ளன. பள்​ளிக் கல்வியும், உயர்கல்வியும் தமிழகத்​தில் மிகப்​பெரிய மாற்​றத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளன.

இந்தியாவின் மக்​கள்​தொகை​யில் 6 சதவீதத்​தைக் கொண்​டுள்ள தமிழகம், நாட்​டின் ஜிடிபி-க்கு 9 சதவீத பங்​களிப்பை அளிக்​கிறது. கல்விதான் அனைத்து மக்​களை​யும் ஒன்​றிணைக்​கும் இணைப்பு சக்​தி. இவ்​வாறு அவர் பேசி​னார் தலைமை விருந்​தின​ராகப் பங்​கேற்ற ‘இந்​து’ என்​.​ராம் பேசும்​போது, “அதி​காரம் பெறு​வதற்​கான சக்​தி​வாய்ந்த சாதனம் கல்வி.

காலம்​கால​மாக கல்வி மறுக்​கப்​பட்ட ஒடுக்​கப்​பட்ட சமூகத்​தினருக்கு கல்வி அளிப்​பது என்​பது ஒரு சவாலான விஷ​யம். அந்​தப் பணியை செய்​தது திரா​விட இயக்​கம். கல்வி மறுக்​கப்​பட்ட சமூகத்​தினருக்கு இடஒதுக்​கீடு, கல்வி உதவித்​தொகை வழங்​கப்​பட்​ட​தால்​தான் தமிழகம் இன்​றைய தினம் கல்வியில் முன்​னணி மாநில​மாகத் திகழ்​கிறது.

இந்​தி​யா​வில் உள்ள பெண் தொழில்​முனை​ வோர்​களில் 43 சதவீதம் பேர் தமிழகப் பெண்​கள் என்​பது சாதாரண விஷ​யம் அல்ல’’ என்​றார். உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்​கர், டிட்கோ தலை​வர் சந்​தியா வேணுகோ​பால் சர்​மா, ஆஸ்​திரியா நாட்​டின் வியன்னா பல்​கலைக்​கழக வேந்​தர் ஹெல்​மெட் கேர்ன் ஆகியோர் வாழ்த்​திப் பேசினர். டிட்கோ நிர்​வாக இயக்​குநர் சந்​தீப் நந்​தூரி நன்றி கூறி​னார்.

முதல்​வர் இன்று பங்​கேற்பு: இம்மாநாட்​டில் இங்​கிலாந்​து, அமெரிக்​கா, ஆஸ்​திரேலி​யா உள்பட 20 நாடு​களைச் சேர்ந்த 400 பல்​கலைக்​கழகங்​களின் பிர​தி​நி​தி​கள், கல்வி​யாளர்​கள், தொழில்​ துறை​யினர் என 1000 பேர் பங்​கேற்​றுள்​ளனர்.

வெளி​நாட்டு பல்​கலை.​களின் அரங்​கு​களும் இடம்​பெற்​றுள்​ளன. இன்று (வி​யாழன்) நடை​பெறும் நிறைவு விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின், உயர்கல்வி அமைச்​சர்​ கோ​வி.செழியன்​ ஆகியோர்​ பேசுகின்​றனர்​.

20 நாடுகளைச் சேர்ந்த 1000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்திய சர்வதேச கல்வி உச்சி மாநாடு சென்னையில் தொடங்கியது
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித்பவார் மறைவுக்கு ஆளுநர், முதல்வர் இரங்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in