

சென்னை: மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித்பவாரின் மறைவுக்கு தமிழக ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் அறிக்கை வருமாறு:
ஆளுநர் ஆர்.என்.ரவி: விபத்தில் அஜித்பவார் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பையும், நிரப்ப முடியாத வெற்றிடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித்பவார் விமான விபத்தில் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். மிகப்பெரும் துன்ப நிகழ்வான இதனை ஏற்றுக் கொள்ள நெஞ்சம் மறுக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: அஜித்பவாரின் மறைவு, மகாராஷ்டிரா மாநில அரசியலுக்கும், பொதுவாழ்வுக்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: அஜித்பவாரின் உயிரிழப்பு செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: அஜித்பவாரின் அரசியல் பயணம் அர்ப்பணிப்பு, பொதுச்சேவை, சிறந்த நிர்வாகத்திறன், மக்கள் நலன் ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: அஜித்பவாரின் மறைவு செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாமக தலைவர் அன்புமணி, மநீம தலைவர் கமல்ஹாசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.