கோவை உட்பட 13 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு

கோவை உட்பட 13 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: கோவை, மதுரை, திருச்சி உள்​ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: வட தமிழக பகு​தி​களில் இருந்து லட்​சத்​தீவு வரை சுமார் 3.1 கி.மீ. உயரத்​தில் வளிமண்டல காற்​றழுத்த தாழ்​வுப் பாதை நில​வு​கிறது. அதே​போல, உத்தர பிரதேசத்​தில் இருந்து மத்​திய பிரதேசம், மகா​ராஷ்டி​ரா, தெலங்​கானா வழி​யாக தெற்கு கடலோர ஆந்​திரா வரை சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை, ஒரு வளிமண்டல காற்​றழுத்த தாழ்​வுப் பாதை நிலவு​கிறது.

இதன் காரண​மாக தமிழகத்​தில் ஒருசில இடங்​களில் இன்று லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். கோவை, நீலகிரி, தேனி, திண்​டுக்​கல், மதுரை, ஈரோடு, நாமக்​கல், கரூர், திருச்​சி, புதுக்​கோட்​டை, சிவகங்​கை, அரியலூர், பெரம்​பலூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்​யக்​ கூடும். நாளை முதல் 23-ம் தேதி வரை தமிழகத்​தில் ஒரு சில இடங்​களில் மித​மான மழை பெய்​யக்​ கூடும். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஓரிரு பகு​தி​களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்​ளது. வெப்பநிலை 84 டிகிரி முதல் 100 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை இருக்கக் ​கூடும்.

தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​கு​டா, அதை ஒட்​டிய குமரிக்​கடல் பகு​தி​களில் இன்று முதல் 21-ம் தேதி வரை மணிக்கு அதி​கபட்​சம் 60 கி.மீ. வேகத்​தில் சூறாவளி காற்று வீசக்​ கூடும். நேற்று காலை 8.30 மணி வரையி​லான 24 மணி நேரத்​தில் அதி​கபட்​ச​மாக வேலூர் மாவட்​டம் மேலாலத்​தூரில் 4 செ.மீ., விருதுநகர், புதுக்​கோட்​டை​யில் 3 செ.மீ. மழை பதி​வாகி​யுள்​ளது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

கோவை உட்பட 13 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உரையாற்றுகிறார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in