தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உரையாற்றுகிறார்

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உரையாற்றுகிறார்
Updated on
2 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை இன்று கூடு​கிறது. ஆளுநர் ஆர்.வி.அர்​லேகர் சட்​டப்​ பேர​வை​யில் முதல் முறை​யாக உரையாற்றுகிறார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யின் ஆண்டு முதல் கூட்​டம் ஆளுநர் உரையுடன் தொடங்​கு​வது வழக்​கம். அதன்​படி கடந்த ஜனவரி மாதம் அப்​போதைய ஆளுநர் ஆர்​.என்​.ரவி தலை​மை​யில் சட்​டப்​பேர​வைக் கூட்​டம் தொடங்​கியது. ஆளுநர் ரவி, வந்தே மாதரம் பாடல் இசைக்​கப்​ப​டாததை சுட்​டிக்​காட்​டி, அரசு தயாரித்து அளித்த உரையைப் பேர​வை​யில் வாசிக்​காமல் வெளி​யேறி​னார். அதன்​பின், அரசு தயாரித்து அளித்த உரை மட்​டுமே பேர​வைக் குறிப்​பில் இடம்​பெற வேண்​டும் என்​ப​தற்​கான தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டு அப்​போதைய பேர​வைத் தலை​வர் மு.அப்பாவு தமிழ் உரையை வாசித்​தார்.

அதற்​குப் பிறகு சட்​டப்​பேர​வைப் பொதுத்​தேர்​தல் நடை​பெற வேண்​டிய நிலை​யில், அப்​போதைய திமுக அரசு இடைக்​கால பட்ஜெட் தாக்​கல் செய்​தது. சட்​டப்​பேர​வைப் பொதுத் தேர்​தல் முடிந்​து, தவெக 108 இடங்​களில் வெற்றி பெற்​றது. இதையடுத்​து, திமுக கூட்​ட​ணி​யில் உள்ள காங்​கிரஸ், விசிக, இந்​திய கம்யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், ஐயுஎம்​எல் கட்​சிகளின் ஆதர​வுடன், முதல்​வ​ராக தவெக தலை​வர் விஜய் கடந்த மே 10-ம் தேதி பொறுப்​பேற்​றார்.

இதையடுத்​து, 17-வது சட்​டப்​பேரவை அமைக்​கப்​பட்​டது. தற்காலிகப் பேர​வைத் தலை​வர் கருப்​பையா முன்​னிலை​யில் சட்டப்​பேரவை உறுப்​பினர்​கள் உறு​தி​மொழி ஏற்​றனர். அதன்​பின், பேர​வைத் தலை​வ​ராக ஜே.சி.டி.பிர​பாகர் மற்​றும் துணைத் தலைவ​ராக ரவிசங்​கர் ஆகியோர் தேர்வு செய்​யப்​பட்​டனர். மே.13-ம் தேதி சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் தலை​மையி​லான அரசு பெரும்​பான்​மையை நிரூபித்​தது. முதல்​வர் விஜய் தலைமையி​லான அமைச்​சர​வை​யில் காங்​கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்​சிகளின் பிர​தி​நி​தி​களுக்​கும் இடம் அளிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், தமிழகத்​தின் 17–வது சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் தலை​மை​யில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்​கு​கிறது. முன்​ன​தாக, ஆளுநர் அர்​லேகரை சமீபத்​தில் சந்​தித்த பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர், பேரவை​யில் உரை நிகழ்த்த அழைப்பு விடுத்​தார்.

இதையடுத்து காலை 9.55 மணிக்கு ஆளுநர் அர்​லேகர் தலை​மைச் செயல​கம் வரு​கிறார். அவரை, பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் மற்​றும் பேர​வை​யின் புதிய செயலர் ஆர்​.​சாந்தி ஆகியோர் பூங்​கொத்து கொடுத்து வரவேற்​கின்​றனர். அதன்​பின், காலை 10 மணிக்குத் தமிழக ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் முதல் முறை​யாக தமிழக சட்​டப்​பேர​வை​யில் உரை​யாற்​றுகிறார். ஆளுநரின் ஆங்​கில உரையைத் தொடர்ந்​து, பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் தமிழ் உரையை வாசிப்​பார். அதன்​பின், பேர​வை​யின் இன்​றைய நிகழ்​வு​கள் முடிவுறும்.

சட்​டப்​பேரவை அலு​வல் ஆய்​வுக் குழு, பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் தலை​மை​யில் கூடி, பேர​வை​யில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீதான விவாதத்தை எத்​தனை நாட்​கள் நடத்​து​வது என்​பது குறித்து முடி​வெடுக்​கும். வரும் திங்​கட்​கிழமை ஜூன் 22-ம் தேதி வரை பேர​வைக் கூட்​டம் நடை​பெற வாய்ப்​புள்​ள​தாக கூறப்​படு​கிறது. ஜூன் 22-ம் தேதி முதல்​வர் விஜய் பிறந்த நாள் என்​ப​தால் அன்று சட்​டப்​பேர​வை​யில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்​கப்​படும் என்​றும் பேரவை வட்டாரங்கள் தெரிவிக்​கின்​றன.

அலு​வல் ஆய்​வுக் குழு

அலு​வல் ஆய்​வுக் குழு​வில் முதல்​வர் விஜய், அமைச்​சர்​கள் என்.ஆனந்த், கே.ஏ.செங்​கோட்​டையன், ஆர்​.நிர்​மல்​கு​மார், அரசு கொறடா சபரி​நாதன், எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின், முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி உள்​ளிட்​டோர் இடம்பெற்றுள்​ளனர்.

தவெக ஆட்சி அமைத்த பிறகு, முழு​மை​யாக நடை​பெறும் முதல் சட்​டப்​பேர​வைக் கூட்​டம் இது என்​ப​தால் முக்​கி​யத்​து​வம் பெற்றுள்ளது. இந்​தக் கூட்​டத் தொடரில், மாநிலத்​தில் நிகழும் பாலியல் குற்​றச் சம்​பவங்​கள், சட்​டம் ஒழுங்கு பிரச்​சினை, பயிர்க்கடன் தள்​ளு​படி​யில் விவ​சா​யிகளின் அதிருப்​தி, தமிழகத்தின் நிதி​நிலை குறித்து சமீபத்​தில் வெளி​யிடப்​பட்ட வெள்ளை அறிக்கை உள்​ளிட்ட பல்​வேறு விஷ​யங்​கள் குறித்து எதிர்க்​கட்சி உறுப்​பினர்​கள் பிரச்​சினையை கிளப்​பு​வார்​கள் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. முதல்​வர் விஜய் தலை​மையி​லான அரசும், சட்​டப்​பேர​வைக்​ கூட்​ட வி​வாதத்​தை முதல்​ முறை​யாக எதிர்​கொள்​ள உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் கடந்த 5 ஆண்​டு​களாகவே, தேசிய கீதம் முதலில் பாடப்பட வேண்​டும் என்​பதை வலி​யுறுத்​தி, அரசு உரையை வாசிக்​காமல் அப்​போதைய ஆளுநர் ரவி தவிர்த்து வந்தார்.

சமீபத்​தில், முதல்​வர், அமைச்​சர்​கள் பதவி​யேற்பு விழா​வில், மத்திய உள்​துறை அறி​வுறுத்​தலின்​படி, முதலில் வந்தே மாதரம், அதன்​பின் தேசிய கீதம், தொடர்ந்து தமிழ்த்​தாய் வாழ்த்து பாடப்​பட்​டது. இதை எதிர்க்​கட்​சிகள் சுட்​டிக்​காட்டி விமர்​சனம் செய்​தன. அதன்​பின் டெல்​லி​யில் பிரதமர் மோடியை சந்​தித்த முதல்​வர் விஜய், அரசு நிகழ்ச்​சிகளில் முதலில் தமிழ்த்​தாய் வாழ்த்து பாட அனு​மதி அளிக்க வேண்​டும் என்று கேட்​டுக் கொண்​டது குறிப்பிடத்​தக்​கது.

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உரையாற்றுகிறார்
நெதர்லாந்தை 114 ரன்களில் சுருட்டியது இந்திய மகளிர் அணி: Women’s T20 WC

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in