“குடியரசு தினத்தன்றும் டாஸ்மாக்கில் சட்டவிரோத மது விற்பனை” - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

 நயினார் நாகேந்திரன்.

நயினார் நாகேந்திரன்.

Updated on
1 min read

சென்னை: ‘குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதியும் சட்ட விரோதமாகப் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்துள்ளது திமுக அரசு’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘குடியரசு தின விழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு, ஜனவரி 25-ஆம் தேதியே ரூ.220 கோடியே 75 லட்சம் மதிப்பிலான மதுவை விற்றதோடு நில்லாமல், ஜனவரி 26-ஆம் தேதியும் சட்டவிரோதமாகப் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்துள்ளது திமுக அரசு.

கள்ளச் சாராயம் குடித்து பலர் பலியாவது ஒருபுறம் இருக்கையில், டாஸ்மாக் மதுவைக் குடித்து இறந்த சம்பவங்களும் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்நிலையில், கள்ளச் சந்தையில் மறைமுகமாக விற்கும் இத்தகைய மதுபானங்களைக் குடித்து, ஏதாவது உயிர் பலி ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது?

பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் விற்று திமுகவின் கஜானாவை நிரப்பியது போதாதென்று, தற்போது தேர்தல் கைச்செலவுக்கு கல்லா கட்ட விடுமுறை நாட்களிலும் முறைகேடாக மதுவை விற்று, தமிழகப் பெண்களின் தாலி அறுக்கப் பார்ப்பது முறையா முதல்வர் ஸ்டாலின் அவர்களே?’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p> நயினார் நாகேந்திரன்.</p></div>
‘ஜனநாயகன்’ ரிலீஸில் மீண்டும் சிக்கல்: தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in