ஐ.சி.எஃப்​-ல் இருக்கை வந்தே பாரத் ரயில்​கள் தயாரிப்பு நிறைவு: 8 ‘ஸ்லீப்பர்’ வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டம்

ஐ.சி.எஃப்​-ல் இருக்கை வந்தே பாரத் ரயில்​கள் தயாரிப்பு நிறைவு: 8 ‘ஸ்லீப்பர்’ வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டம்
Updated on
2 min read

சென்னை: சென்னை ஐசிஎஃப் ஆலை​யில் கடைசி​யான இருக்கை வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி நிறைவடைந்த நிலை​யில், தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்பு முழு​வீச்​சில் தொடங்க உள்​ளது. நடப்பு நிதி​யாண்​டில் 8 ஸ்லீப்​பர் வந்தே பாரத் ரயில்​களை தயாரிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

உலகப் புகழ்​பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்​சாலைகளில் ஒன்​றான சென்னை ஐ.சி.எஃப். திகழ்​கிறது. இங்கு பல்​வேறு வகை​களில் 80 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ரயில் பெட்​டிகள் தயாரித்து வழங்​கப்​பட்​டுள்​ளன. தற்​போது, இந்த ஆலை​யில் அதிநவீன வந்தே பாரத் ரயில் தயாரிப்​பில் ஆர்​வம் காட்​டப்​படு​கிறது.

வந்தே பாரத் ரயிலைப் பொருத்​தவரை, ஐ.சி.எஃப்​-ல் முதன் முறை​யாக உள்​நாட்டு தொழில்​நுட்​பத்​தில் “ரயில் 18” என்ற பெயரில் தயாரிக்​கப்​பட்​டது. இதற்கு “வந்தே பாரத் ரயில்” என்று பெயரிடப்​பட்​டது. இருக்கை வசதி கொண்ட இந்த ரயில் சேவை முதன்​முதலாக, புதுடில்லி - வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு தொடங்​கியது. தற்​போது நாட்​டின் பல்​வேறு நகரங்​களுக்கு இடையே 80-க்​கும் மேற்​பட்ட வந்தே பாரத் ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

பல்​வேறு வசதி​களை கொண்ட இந்த ரயில்​களுக்கு பயணி​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு கிடைத்து வரு​கிறது. முன்​ன​தாக, ஐசிஎஃப் ஆலை​யில் இருக்கை வசதி​யுடைய 97 வந்தே பாரத் ரயில்​களை தயாரிக்க ஆர்​டர் வழங்​கப்​பட்​டது. இதுத​விர, தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், பார்​சல் வந்தே பாரத் ரயில், வந்தே மெட்ரோ ரயில், அம்​ரித் பாரத் ரயில் உள்​ளிட்ட வகை​களில் ரயில்​கள் தயாரிக்க முடிவு செய்​யப்​பட்​டன.

<div class="paragraphs"><p>தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் மற்றும் ரயிலின் உட்புறதோற்றம்.	(கோப்பு படம்)</p></div>

தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் மற்றும் ரயிலின் உட்புறதோற்றம். (கோப்பு படம்)

இவற்​றில் அம்​ரித் பாரத் ரயில், வந்தே மெட்ரோ ரயில் அடுத்​தடுத்து தயாரித்து வழங்​கப்​பட்​டது. 16 பெட்​டிகள் கொண்ட தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெங்​களூரு​வில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் நிறு​வனத்​தில் ஐ.சி.எஃப் பங்​களிப்​புடன் தயாரிக்​கப்​பட்​டது. இந்த ரயில் தற்​போது ஹவுரா (மேற்கு வங்​கம்) - காமாக்யா (கவு​காத்​தி, அசாம்) இடையே வழித்​தடத்​தில் இயக்​கப்​படு​கிறது. இதையடுத்​து, தூங்​கும் வசதி வந்தே பாரத் ரயில்​கள் தயாரிப்பு பணியை அதி​கப்​படுத்த முயற்சி எடுக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், சென்னை ஐசிஎஃப் ஆலை​யில் கடைசி​யான இருக்கை வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி அண்​மை​யில் நிறைவடைந்​தது. இனி வரும் காலங்​களில், தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்​கள் தயாரிப்பு முழு​வீச்​சில் நடை​பெறவுள்​ளன. அந்த வகை​யில், நடப்பு நிதி​யாண்​டில் 8 தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்​கள் தயாரிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இது குறித்​து, சென்னை ஐ.சி.எஃப் அதி​காரி​கள் கூறிய​தாவது: ஐசிஎஃப் ஆலை​யில் மொத்​தம் 97 இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்​கள் தயாரித்து வழங்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டிருந்​தது. அண்​மை​யில் 97-வது வந்தே பாரத் ரயில் தயாரித்து உள்​ளோம். இந்த ரயில் வடக்கு ரயில்​வேக்கு அனுப்​பப்​படும். இனி வரும் காலங்​களில் தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி முழு​வீச்​சில் மேற்​கொள்ள உள்​ளோம்.

தற்​போது வரை, பாரத் எர்த் மூவர்ஸ் நிறு​வனத்​துடன் இணைந்​து, 4 தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரித்து வழங்கி உள்​ளோம். நடப்பு நிதி​யாண்​டில், பாரத் எர்த் மூவர்ஸ் நிறு​வனத்​துடன் இணைந்து 6 தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்​கள் தயாரித்து வழங்க உள்​ளோம்.

இதுத​விர, இரண்டு தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்​களை ஐசிஎஃப் ஆலை​யில் சொந்​த​மாக தயாரிக்க இருக்​கிறோம். ஒரு ரயில் தயாரிக்க சுமார் ரூ.1.30 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. தூங்​கும் வசதி கொண்ட வந்​தே​பாரத் ரயில் தயாரிப்பு பணி விரை​வில் தொடங்க உள்​ளது. இந்​தர​யில்​கள் தலா 16 பெட்​டிகளை கொண்​ட​தாக இருக்​கும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

நாட்​டில் முக்​கிய வழித்​தடங்​களில் 400 வந்தே பாரத் ரயில்​களை இயக்க ரயில்வே திட்​ட​மிட்​டுள்​ளது. இதன் ஒரு பகு​தி​யாக, தூங்​கும்​ வசதி கொண்​ட வந்​தே ​பாரத்​ ரயில்​களை படிப்​படி​யாக த​யாரித்​து வழங்​கப்​பட உள்​ளன. இவை​கள்​ 16 பெட்​டிகளை​யும், 24 பெட்​டிகளை​யும்​ கொண்​ட ரயில்​களாக இருக்​கும்​.

ஐ.சி.எஃப்​-ல் இருக்கை வந்தே பாரத் ரயில்​கள் தயாரிப்பு நிறைவு: 8 ‘ஸ்லீப்பர்’ வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டம்
அமோனியா வாயு கசி​வால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in