குரூப்-1 அதிகாரிகள் 11 பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து

குரூப்-1 அதிகாரிகள் 11 பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து
Updated on: 
1 min read

சென்னை: தமிழக அரசின் குரூப்-1 அதிகாரிகள் 11 பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பணியாளர், பயிற்சித் துறை வெளியிட்ட அரசிதழ் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு மாநில சிவில் சர்வீஸ் பிரிவில் இருந்து 11 பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

இதில் 2024-ம் ஆண்டுக்கான காலி இடங்களில் ஆர்.பிரியா, எஸ்.பிரசன்னா ராமசாமி, எம்.இந்துமதி, ஆர்.ராஜகிருபாகரன், எஸ்.சங்கீதா, கே.பிரியா ஆகிய 6 பேரும், 2025-ம் ஆண்டுக்கான காலி இடங்களில் எம்.மணிமேகலை, ஏ.மீனா பிரியதர்ஷினி, டி.செங்கோட்டையன், எஸ்.சாந்தி, என்.காளிதாஸ் ஆகிய 5 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இவர்களில், ஆளுநர் மாளிகையில் பணியாற்றி வரும் பிரசன்னா ராமசாமி, குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று துணை ஆட்சியராக பணியைத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப்-1 அதிகாரிகள் 11 பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து
சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை: பாரிமுனையில் 17.5 செ.மீ பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in