வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வால் சென்னையில் ஹாஸ்டல், பிஜி வாடகை 10 சதவீதம் அதிகரிப்பு

வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வால் சென்னையில் ஹாஸ்டல், பிஜி வாடகை 10 சதவீதம் அதிகரிப்பு
Updated on
1 min read

சென்னை: சென்​னை​யில் வணிக காஸ் சிலிண்​டர்​களின் விலை கடுமை​யாக உயர்ந்​துள்​ள​தால் தங்​கும் விடு​தி​களின் (ஹாஸ்​டல், பிஜி) வாடகையை அவற்​றின் உரிமை​யாளர்​கள் 10 சதவீதம் வரை உயர்த்​தி​யுள்​ளனர்.

பல்​வேறு மாவட்​டங்​களி​லிருந்து படிக்க வரும் மாணவர்​கள், வேலைக்கு வரும் இளைஞர்​கள் ஹாஸ்​டல், பிஜி போன்ற தங்​கும் விடு​தி​களில்​ தங்கி தங்​களது படிப்​பை​யும், வேலை​யை​யும் தொடர்​கின்​றனர்.

அந்த வகை​யில் சென்​னை​யில் மட்​டும் 15 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட விடு​தி​கள் இயங்கி வரு​கின்​றன. அதில் 12 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் வசித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் வணிக காஸ் சிலிண்டர்களின் விலை கடுமை​யாக உயர்ந்​த​தால், விடு​தி​களின் வாடகை 10 சதவீதம் வரை உயர்த்​தப்​பட​வுள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக தமிழ்​நாடு ஐடி விடுதி மற்​றும் பிஜி உரிமை​யாளர்​கள் நலச் சங்​கம் வெளி​யிட்ட சுற்​றறிக்​கை​யில், “அமெரிக்கா - ஈரான் போர் காரண​ மாக இந்த ஆண்​டின் தொடக்​கத்​தில் ரூ.1,899 ஆக இருந்த 19 கிலோ வணிக காஸ் சிலிண்​டர் விலை தற்​போது ரூ.3,258 ஆக உயர்ந்​துள்​ளது.

இதனால் சமையல் செல​வு​கள் கட்​டுப்​படி​யா​காத​தால், சென்​னை​யில் ஹாஸ்​டல், பிஜி வாடகை 10 சதவீதம் வரை அதி​கரிக்​கப்​படு​கிறது. அதன்​படி ஏசி இல்​லாத தங்​குமிடத்​துக்​கான மாதாந்​திர கட்​ட​ணம், 4 பேர் தங்​கும் அறை​களுக்கு ரூ.6,500-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

அதே​போல் 3 பேர் தங்​கும் அறை​களுக்கு ரூ.7 ஆயிரத்​திலிருந்து ரூ.8 ஆயிர​மாக​வும், 2 பேர் தங்​கும் அறை​களுக்கு ரூ.8 ஆயிரத்​திலிருந்து ரூ.9 ஆயிர​மாக​வும் மாற்​றியமைக்​கப்​பட்​டுள்​ளது.

இவை அடிப்​படை விலைகள்​தான், இருப்​பிடம் மற்​றும் வசதி​களுக்கு ஏற்ப வாடகை மாறு​படலாம்” என்று அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த அறிக்​கை​யில் உள்ள விவரங்​களின்​படி, விடு​தி​களின் வாடகை வரும் 5-ம் தேதி (நாளை) முதல் அமல்​படுத்​தப்​படலாம் என கூறப்​படு​கிறது.

ஏஜென்​சிகளிடம் பெரும்​பாலும் சிலிண்​டர்​கள் கிடைக்​காத​தால், கள்​ளச் சந்​தை​யில் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை கொடுத்தே சிலிண்​டர்​களை பெற வேண்​டி​யிருப்​ப​தால் தங்​கும் விடு​தி​களின் வாடகையை கூட்​டு​வதற்​கான தேவை ஏற்​பட்​டிருப்​ப​தாக சங்​கத்​தினர் தெரிவிக்​கின்​றனர்.

சென்​னை​யில் விடு​தி​களின் வாடகை அதி​கரிப்பு இளைஞர்​கள், மாணவர்​களிடையே அதிர்ச்​சியை ஏற்படுத்தி​ உள்ளன.

வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வால் சென்னையில் ஹாஸ்டல், பிஜி வாடகை 10 சதவீதம் அதிகரிப்பு
ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in