பேரறிவாளன் வழக்கறிஞர் பதிவு: காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை - உயர் நீதிமன்றம் நிராகரிப்பு

பேரறிவாளன் வழக்கறிஞர் பதிவு: காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை - உயர் நீதிமன்றம் நிராகரிப்பு
Updated on
1 min read

சென்னை: ​முன்​னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்​கில் 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக சிறை தண்​டனை அனுப​வித்​து, உச்ச நீதி​மன்​றத்​தால் விடுவிக்​கப்​பட்ட பேரறி​வாளனின் வழக்​கறிஞர் பதிவை நிறுத்தி வைக்​கக் கோரி மயி​லாடு​துறை காங்​கிரஸ் எம்​.பி. சுதா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அவர் கூறி​யிருந்​த​தாவது: விடு​தலைப் புலிகள் இயக்​கத்​துடன் தொடர்​பில் இருந்​தவர், ராஜீவ் காந்தி கொலை​யில் தொடர்​புடைய​வர் பேரறிவாளன். அவரை கருணை அடிப்​படை​யில் உச்ச நீதி​மன்​றம் விடு​வித்​துள்​ளதே தவிர, குற்​றமற்​றவர் என்று அல்ல.

எனவே, தமிழ்​நாடு, புதுச்​சேரி பார் கவுன்​சிலில் கடந்த ஏப்​.24 அன்று வழக்​கறிஞ​ராக பதிவு செய்து கொண்ட பேரறி​வாளனின் பதிவை நிறுத்தி வைத்​து, பதிவை ரத்து செய்​ய​வும் இடைக்​கால உத்​தரவு பிறப்​பிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் எல்​.விக்​டோரியா கவுரி, என்​.செந்​தில்​கு​மார் அமர்​வு, எதிர் மனு​தா​ரர்​கள் தரப்பு வாதத்தை கேட்​காமல் இந்த வழக்​கில் எந்த இடைக்​கால உத்​தர​வும் பிறப்​பிக்க முடி​யாது என்று கூறி, மனு​தா​ரரின் கோரிக்​கையை நிராகரித்​தனர்.

பேரறிவாளன் வழக்கறிஞர் பதிவு: காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை - உயர் நீதிமன்றம் நிராகரிப்பு
அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in