

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நடுநிலையானது என தமாகா தலைவர் ஜிகே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, மலையிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டது.
இது குறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ‘உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, தொல்லியல் துறையின் பங்களிப்புடன் மதுரை ஆட்சியர் மேற்பார்வையுடன் ஒவ்வொரு கார்த்திகையின் போது, தேவஸ்தானம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என பிறப்பித்த உத்தரவு வரவேற்கத்தக்கது. இது நியாயமான, நடுநிலையான தீர்ப்பு.
இதற்கேற்ப அனைவரும் நடந்து கொள்ளவேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏழாதபோது, அது குறித்து மக்களிடையே தமிழக அரசு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடாது என்பதற்கு எடுக்காட்டானது தீர்ப்பு. இச்செய்தி பக்தர்கள், மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார்.