சென்னை, புறநகரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை

சென்னை, புறநகரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை
Updated on: 
1 min read

சென்னை: சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் நேற்று மாலை தொடங்​கிய மழை பரவலாக இரவு வரை நீடித்​தது.

தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை கடந்த 15-ம் தேதி தொடங்கியது. அன்றே சென்னை மற்​றும் புறநகரில் ஆங்​காங்​கே, விட்டு விட்டு மித​மான மழை பெய்​தது. 16-ம் தேதி இரவு சுமார் 7 மணி அளவில் பரவலாக மழை பெய்​யத் தொடங்​கியது. தொடர்ந்து பலத்த இடி, மின்​னலுடன் கனமழை பெய்​தது.

நேற்று காலை முதல் மாலை வரை கடும் வெயில் வாட்​டிய நிலையில், மாலை 6 மணிக்கு மேல் வடசென்னை பகு​தி​யில் மழை தொடங்​கி, பின்​னர் மாநகர், புறநகர் பகு​தி​களுக்​கும் பரவி இரவு 8 மணிக்கு பிறகு இடி, மின்​னலுடன் கூடிய கனமழை நீடித்தது. விசாலைகளில் மழைநீர் தேங்கிய​தால், வாக​னங்​கள் ஊர்ந்து சென்​றன.

இதனால் பிர​தான சாலைகளில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்பட்​டது. மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் உள்​ளிட்ட உயர் அதி​காரி​கள் இரவு முழு​வதும் முக்​கிய இடங்​களில் கண்காணித்தனர். சுரங்​கப் பாலங்​களில் நீர் தேங்​காத​வாறு மழைநீரை வெளி​யேற்​ற நடவடிக்கை எடுத்தனர்.

சென்னை, புறநகரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை
தாம்பரத்தில் சுகாதாரக் கண்காட்சி தொடக்கம்: பார்வையாளர்களை கவர்ந்த 52.8 அடி உயர ‘ஹெல்த் கொலு’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in