வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களை விவசாய பணியில் ஈடுபடுத்த உயர் நீதிமன்றம் யோசனை

வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களை விவசாய பணியில் ஈடுபடுத்த உயர் நீதிமன்றம் யோசனை
Updated on
1 min read

மதுரை: ​விவ​சாய பணி​களுக்கு தொழிலா​ளர்​கள் கிடைக்​காத நிலை​யில், வேலை உறு​தி​யளிப்பு திட்​டப் பணி​யாளர்​களை விவ​சாயப் பணி​யில் ஈடு​படுத்​து​வது தொடர்​பாக அரசுகள் பரிசீலிக்​கலாம் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

திருச்​சி​யைச் சேர்ந்த அம்​பி​கா, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: திருச்சி கால்​நடை மருத்​து​வ​மனை​யில் துப்​புரவு பணி​யாள​ராக பணிபுரிந்து வரு​கிறேன். என்னை பணிநிரந்​தரம் செய்ய வட்​டார வளர்ச்சி அலு​வலர் பரிந்​துரை செய்​தார். இருப்​பினும் பணிநிரந்​தரம் செய்​யப்​பட​வில்​லை. என்னை பணிநிரந்​தரம் செய்ய வட்​டார வளர்ச்சி அலு​வலர் பரிந்​துரை செய்​திருந்த போதி​லும் அரசு அதனை பரிசீலிக்​க​வில்​லை. இதனால், மருத்​து​வ​மனை​யில் உள்ள நிரந்தர காலிப்​பணி​யிடத்​தில் என்னை நியமிக்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறி​யிருந்​தார்.

மனுவை நீதிபதி பி.பு​கழேந்தி விசா​ரித்​தார். அரசு தரப்​பில், மனு​தா​ரர் நிரந்தர பணி​யிடத்​தில் நியமிக்​கப்​பட​வில்​லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​தின் கீழ் தற்​காலிக அடிப்​படை​யில் பணி​யில் நியமிக்​கப்​பட்​டார். அவருக்கு பணிநிரந்​தரம் கோர உரிமை​யில்லை எனக் கூறப்​பட்​டது.

இதையடுத்து நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலா​ளர்​கள் கிராமப்​புற கால்​நடை மருத்​து​வ​மனை​களில் பணி​களில் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இத்​திட்​டம் ஆண்​டுக்கு நூறு நாள் குளங்​கள் தூர்​வாருதல், கால்​வாய் தோண்​டு​தல், புதர்​கள் அகற்​று​தல் போன்ற கைகளால் செய்​யப்​படும் பணி​களை மைய​மாகக் கொண்டு உரு​வாக்​கப்​பட்​டது. இத்​திட்​டத்​தில் ஒரு​வர் எப்​படி பல ஆண்​டு​களாக பணிபுரிந்​தார் என்​பது தெரிய​வில்​லை.

தற்​போது தொழில்​நுட்ப வளர்ச்​சி​யால் பல பணி​கள் இயந்​திரங்​கள் மூலம் குறுகிய நேரத்​தில் மேற்​கொள்​ளப்​படு​கிறது. இயந்​திரங்​கள் மூலம் செய்​யக்​கூடிய பணி​களில் மனிதர்​களை பயன்​படுத்​து​வதற்​குப் பதிலாக வேளாண் துறை​யில் நிலவி வரும் தொழிலா​ளர் பற்​றாக்​குறையை சமாளிக்க இந்த தேசிய வேலை உறுதித் திட்​டத்தொழிலா​ளர்​களை பயன்​படுத்த முடி​யுமா என்​பதை அரசு பரிசீலிக்க வேண்​டும்.

விவ​சா​யிகள் எதிர்​கொள்​ளும் தொழிலா​ளர் பற்​றாக்​குறையை சமாளிக்​க​வும், தொழிலா​ளர்​களுக்கு வேலை​வாய்ப்பை உறுதி செய்​ய​வும் அரசும் விவ​சா​யிகளும் இணைந்து ஊதி​யச் சுமையை பகிர்ந்து கொள்​ளும் வகை​யில் புதிய கட்​டமைப்பை உரு​வாக்​கலாம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​தின் பெயர் மாற்​றப்​பட்​டுள்​ளது. புதிய திட்​டத்​தில் வேளாண் துறை​யில் நூறு நாள் வேலை திட்ட தொழிலா​ளர்​களை பயனுள்ள வகை​யில் ஈடு​படுத்​து​வது குறித்து அரசு ஆலோ​சிக்க வேண்​டும்.

பொதுநலத் திட்​டங்​களில் காலத்​துக்கு ஏற்ற வகை​யில் மாற்​றங்​கள் ஏற்​படுத்த வேண்​டும். எனவே தொழிலா​ளர்​கள், விவ​சா​யிகள் மற்​றும் கிராமப்​புற பொருளா​தா​ரத்​தின் நலனை கருத்​தில் கொண்டு மனிதவளத்தை திறம்பட பயன்​படுத்​து​வதற்​கான கொள்கை முடிவு​களை அரசு எடுக்க வேண்​டும். இவ்​வாறு நீதிபதி உத்​தர​வில் கூறியுள்​ளார்.

வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களை விவசாய பணியில் ஈடுபடுத்த உயர் நீதிமன்றம் யோசனை
முதல்வர் விஜய் ஆக்‌ஷனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ரியாக்‌ஷனும் சரியா? - ஒரு ‘மாண்புமிகு’ பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in