கும்மிடிப்பூண்டி தொகுதியில் கொடி நாட்டப்போகும் வேட்பாளர் யார்?

கும்மிடிப்பூண்டி தொகுதியில் கொடி நாட்டப்போகும் வேட்பாளர் யார்?
Updated on
2 min read

ஆந்​திர மாநிலத்தை ஒட்​டி​யுள்ள சட்​டப்​பேர​வைத் தொகுதி கும்​மிடிப்​பூண்​டி. தொகு​தி​களின் வரிசைப் பட்​டியலின் முதல் தொகுதி எனும் சிறப்​புப் பெற்​றது இத்​தொகு​தி.

பிரசித்தி பெற்ற பெரிய​பாளை​யம் பவானி அம்​மன் கோயில், சென்னை குடிநீருக்​கான புதிய நீர்த்​தேக்​க​மான கண்​ணன்​ கோட்​டை-தேர்​வாய் கண்​டிகை நீர்த்​தேக்​கம், பல தனி​யார் அனல்​மின் நிலை​யங்​கள், இரும்பு உருக்​காலைகள், தொழிற்​சாலைகள் அடங்​கிய 4 தொழிற்​பேட்​டைகள், தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​கள் உள்​ளிட்​ட​வற்றை தன்​னகத்தே கொண்​டுள்​ளது.

கடந்த பிப்​.23-ம் தேதி வெளி​யிடப்பட்ட இறுதி வாக்​காளர் பட்​டியலின்​படி, இத் தொகு​தி​யில், 2 லட்​சத்து 51 ஆயிரத்து 603 வாக்​காளர்​கள் உள்​ளனர். அதி​முக​வின் கோட்​டை​யாக கருதப்​படும் இத்​தொகு​தி​யில், கடந்த 1957 முதல் 2021 வரை (2005 இடைத்​தேர்​தல் உட்​பட) 16 தேர்​தல்​கள் நடை​பெற்​றுள்​ளன.

இதில் 8 முறை அதி​முக​வும், 2011 தேர்​தலில் அதி​முக கூட்​ட​ணி​யில் அங்​கம் வகித்த தேமு​தி​க​வும், 5 முறை திமுக​வும், தலா ஒரு முறை காங்​கிரஸும், சுதந்​திரா கட்​சி​யும் வெற்றி பெற்​றுள்​ளன. இத் தொகு​தி​யில் 2001 தேர்​தலில் வென்ற அதி​முக வேட்​பாளர் கே.சுதர்​சனம், பிற்​படுத்​தப்​பட்​டோர் நலத்​துறை அமைச்​ச​ராக சிறிது காலம் பதவி வகித்​தார்.

கடந்த 2005-ல் பெரிய​பாளை​யம் அருகே உள்ள தானாக்​ குளத்​தில் கே.சுதர்​சனம் வீட்​டுக்​குள் புகுந்த பவாரியா கொள்​ளை​யர்​கள், அவரை கொலை செய்​து​விட்டு தப்​பியது மிக​வும் பரபரப்​பானது. 2005 இடைத்​தேர்​தல், மற்​றும் 2006, 2016 தேர்​தல்​களில் கே.சுதர்​சனத்​தின் மகன் கே.எஸ்​.​விஜயகு​மார் அதி​முக வேட்​பாள​ராக வெற்றி பெற்றார். கடந்த 2021 தேர்​தலில் திமுக​வின் டி.ஜெ.கோ​விந்​த​ராஜன் 1,26,452 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார்.

தொகு​தி​யில் நிலவும் பிரச்​சினை​கள்

தொழிற்​பேட்​டைகள் அடங்​கிய கும்​மிடிப்​பூண்டி மற்​றும் அதனைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் காற்​று, நிலத்​தடி நீரில் அதிக மாசு ஏற்​படு​வது முக்​கிய பிரச்​சினை​யாக உள்​ளது.

கும்​மிடிப்​பூண்டி பகு​தி​யில் படுக்கை வசதி​யுடன் கூடிய இ.எஸ்​.ஐ. மருத்​து​வ​மனை, விபத்து மற்​றும் அவசர சிகிச்சை மையம், மாநகர போக்​கு​வரத்​துக்​கழக பணிமனை, அரசு கலைக்​கல்​லூரி அமைக்க வேண்​டும், கும்​மிடிப்​பூண்​டி, மாதர்​பாக்​கம் பேருந்து நிலை​யங்​களை நவீன வசதி​கள் கொண்​ட​வை​யாக மேம்​படுத்​தவேண்​டும் உள்​ளிட்​டவை மக்​களின் நீண்​ட​கால கோரிக்​கைகளாக உள்​ளன.

இத்​தொகு​தி​யில் பெரு​மள​வில் வசித்து வரும் வன்​னியர், பட்​டியலின மக்​கள்​தான் தேர்​தலில் வெற்​றி, தோல்​வியை நிர்​ண​யிப்​பவர்​களாக உள்​ளனர். இவர்​களுக்கு அடுத்​த​படி​யாக முதலி​யார், தெலுங்கு மொழி பேசும் நாயுடு சமூகத்​தினரும் கணிச​மாக வசித்து வரு​கின்​றனர்.

வேட்​பாளர்​கள் பின்​புலம்

இத்​தேர்​தலில் திமுக சார்​பில் டி.ஜெ.கோ​விந்​த​ ராஜன் மீண்​டும் போட்​டி​யிடு​கிறார். அதி​முக​வில், அக்​கட்​சி​யின் பூண்டி கிழக்கு ஒன்​றிய துணைச் செய​லா​ளர் வி.சு​தாகர்,நாதக-​வில் இரா.தர், தவெக-​வில் விஜயகு​மார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மேலும், வி.கே.சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக்கழக கூட்டணியில் அங்கம் வகிக்கிற பாமக (ராமதாஸ் அணி) சார்பில் சங்கரும் களத்தில் இறங்கியுள்ளார்.

இருப்பினும் இங்கு திமுக, அதி​முக இடை​யில்​தான் போட்டி நில​வுகிறது. திமுக வேட்​பாளரைப் பொருத்​தவரை மகளிர் உரிமைத் தொகை போன்ற சமூகநலத் திட்​டங்​கள், கூட்​டணிக் கட்​சிகளின் வாக்கு வங்​கிகள் அவருக்கு சாதக​மாக உள்​ளன.

மேலும், கணிச​மாக உள்ள இஸ்​லாமிய, கிறிஸ்தவ வாக்​கு​களும் பலமாக உள்ளன. இருப்பினும் கும்​மிடிப்​பூண்டி தொகு​தி​யில் வெற்​றிக்​கொடி நாட்​டப்​போவது யார் என்​பதை பொறுத்​திருந்​து​ தான் பார்க்க வேண்​டும்.

வாக்காளர்கள் விவரம்

ஆண்கள் - 1,22,195

பெண்கள் - 1,29,372

3-ம் பாலினத்தவர் - 36

மொத்த வாக்காளர்கள் - 2,51,603

கும்மிடிப்பூண்டி தொகுதியில் கொடி நாட்டப்போகும் வேட்பாளர் யார்?
ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜொலிக்கப் போவது யாரு? - ஒரு பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in