

முதுமலை: நாடு முழுவதும் இன்று 80-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஆசியாவிலேயே புகழ்பெற்று விளங்கக்கூடிய நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
யானைகள் முகாம் வளாகத்தில் முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல துணை இயக்குனர் வித்யாதர் தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது கொடி மரத்தின் அருகே வரிசையாக நின்றிருந்த செந்தில் வடிவு, பாமா, காமாட்சி, சேரம்பாடி சங்கர், ஆஸ்கர் நாயகி என செல்லமாக அழைக்கக்கூடிய பொம்மி ஆகிய ஐந்து யானைகள் வரிசையாக நின்று தேசியக்கொடி ஏற்றப்பட்டவுடன் துதிக்கையை தூக்கி பிளிறி மரியாதை செலுத்தின.
இந்த காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தது. யானைகளை வைத்து கொண்டாடப்பட்ட இந்த 80 வது சுதந்திர தின விழாவை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.