சட்டம் - ஒழுங்கு தகவல்களை ஆர்டிஐ மூலம் பெற விலக்கு அளித்த அரசாணை உடனடி வாபஸ்: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் அரசு நடவடிக்கை

சட்டம் - ஒழுங்கு தகவல்களை ஆர்டிஐ மூலம் பெற விலக்கு அளித்த அரசாணை உடனடி வாபஸ்: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் அரசு நடவடிக்கை
Updated on: 
2 min read

சென்னை: தமிழக அரசின் சட்​டம் - ஒழுங்கு துறை தகவல்​களை ஆர்​டிஐ மூலம் பெறு​வதற்கு விலக்கு அளித்து பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணை​யை, பல்​வேறு தரப்​பினர் எதிர்ப்பு தெரி​வித்​ததை தொடர்ந்து தமிழக அரசு வாபஸ் பெற்​றது.

அரசின் பல்​வேறு துறை​களின் செயல்​பாடு​கள் குறித்து பொது​மக்​கள் தகவல் அறி​யும் உரிமை சட்​டம் (ஆர்​டிஐ) மூலம் தகவல்​களை பெற்று வரும் சூழலில், சட்​டம் - ஒழுங்கு துறைக்கு இதிலிருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணையை வெளி​யிட்டது. மனிதவள மேலாண்​மைத்துறை செய​லா​ளர் சி.சமயமூர்த்தி வெளி​யிட்ட அந்த அரசாணை​யில், “சாதி மற்​றும் மத மோதல்​கள், விசா​ரணை கமிஷன்​கள் அமைத்​தல், துப்​பாக்​கிச் சூடு சம்​பவங்​கள், ரகசிய புல​னாய்வு விவரங்​கள், குண்​டர் சட்​டம் உள்​ளிட்ட தடுப்​புக் காவல் நடவடிக்​கைகள் போன்ற அதீத பாது​காப்பு சார்ந்த விவ​காரங்​களை இத்​துறையால் கையாளப்​படுகிறது.

இதனை பாது​காக்​கும் நோக்​கில் சட்​டப்​பிரிவு 24(4)-ன் கீழ் ஆளுநரின் ஒப்​புதலுடன், ஆர்​டிஐ-​யில் இருந்து சட்​டம் - ஒழுங்கு துறை தொடர்​பான தகவல்​களை பெறு​வ​தில் கட்​டுப்​பாடு விதிக்​கப்​படு​கிறது. உளவு மற்​றும் பாது​காப்பு பணி​களில் ஈடு​படும் அமைப்​பாக அறி​வித்து இந்த விலக்கு அளிக்​கப்​படு​வ​தாக தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்த அரசாணைக்கு பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர்: வெளிப்​படை​யான நிர்​வாகத்தை உறுதி செய்​யும் தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் விலக்கு பட்​டியலில் பொது (சட்​டம் மற்​றும் ஒழுங்​கு) துறையை​யும் சேர்த்து விரிவுபடுத்​தி​யிருப்​பது கவலைக்​குரியது. இத்​தகைய விலக்​கு, வெளிப்​படைத்​தன்​மை​யை​யும் நல்​லாட்​சி​யை​யும் முன்​னிறுத்​தும் அரசுக்கு உகந்​த​தாக அமை​யாது.

பாமக தலை​வர் அன்​புமணி: ஒரு மாநிலத்​தின் அமை​திக்​கும், பாது​காப்​புக்​கும்சட்​டம் - ஒழுங்கு மிக​வும் முக்​கிய​மானது. அது குறித்த தகவல்​களை பெறும் அடிப்​படை உரிமையை மக்​களிட​மிருந்து தமிழக அரசு பறித்​திருப்​பது கண்​டிக்​கத்​தக்​கது. இந்த அரசாணையை தமிழக அரசு உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்: தமிழக அரசின் இந்த செயல் ஜனநாயகத்​துக்​கும், வெளிப்​படை தன்​மைக்​கும் எதி​ரானது. இது அரசி​யல் சாசனம் உறுதி செய்​துள்ள போராட்ட உரிமை​களை நசுக்​கும் முயற்​சி​யாகும்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: தகவல் அறி​யும் உரிமை சட்​டத்​தின் வரம்​பிலிருந்து சட்​டம் - ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்​துள்​ளது கண்​டனத்​துக்​குரியது.

இதே​போல் அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன், ஐஜேகே தலை​வர் ரவிபச்​ச​முத்து உள்​ளிட்​டோரும் கண்​டனம் தெரி​வித்​திருந்​தனர்.

பல்​வேறு தரப்​பிலிருந்​தும் எதிர்ப்​பு​கள் தீவிரமடைந்​ததை தொடர்ந்​து, தமிழக அரசு தனது முடிவை மறு​பரிசீலனை செய்து அரசாணை​யைத் திரும்ப பெறு​வ​தாக அறி​வித்​தது. இதுகுறித்து அமைச்​சர் சிடிஆர் நிர்​மல்​கு​மார் தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “தகவல் அறி​யும் உரிமைச் சட்​டப்​பிரிவு 24(4)-ன் கீழ் பொது (சட்​டம் - ஒழுங்​கு) துறைக்கு விலக்கு அளித்து வெளி​யிடப்​பட்ட தமிழக அரசின் அரசாணை விலக்கி கொள்​ளப்​பட்​டுள்​ளது” என தெரி​வித்​தார்.

அரசின் இந்த நடவடிக்​கைக்கு வரவேற்பு தெரி​வித்​துள்ள காங்​கிரஸ் எம்​.பி. பிர​வீன்சக்​கர​வர்த்​தி, “பிற கட்​சிகளின் ஆக்​கப்​பூர்​வ​மான கருத்​துகளுக்​குச் செவி​சாய்த்​து, தேவைப்​படும்​போது முடிவு​களைச் சரிசெய்து கொள்​ளும்​ துணிச்​சலை அரசு வெளிப்​படுத்தி​யுள்​ளது” என குறிப்​பிட்​டு உள்​ளார்.

சட்டம் - ஒழுங்கு தகவல்களை ஆர்டிஐ மூலம் பெற விலக்கு அளித்த அரசாணை உடனடி வாபஸ்: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் அரசு நடவடிக்கை
தீவிரவாதத்துக்குத் தகுந்த பதிலடி கொடுப்போம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in