தீவிரவாதத்துக்குத் தகுந்த பதிலடி கொடுப்போம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறுதி

“சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதை உலகத்துக்குத் தெரியப்படுத்தினோம்”
தீவிரவாதத்துக்குத் தகுந்த பதிலடி கொடுப்போம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறுதி
Updated on: 
2 min read

புதுடெல்லி: “தீ​விர​வாதத்​துக்​கு் தகுந்த பதிலடி கொடுக்​கப்​படும்” என்று மனதின் குரல் வானொலி உரை​யில் பிரதமர் மோடி திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளார்.

மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை ‘மன​தின் குரல்’ வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்​களு​டன் பிரதமர் மோடி பேசி வரு​கி​றார். இதன்​படி 138-வது மனதின் குரல் நேற்று ஒலிபரப்​பானது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: கடந்த 2016-ம் ஆண்டு செப்​டம்​பர் 28-29 தேதி​களில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் பதுங்​கி​யிருந்த முகாம்​கள் மீது துல்​லி​யத்தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. தீவிர​வாதத்தை ஒரு​போதும் சகித்​துக் கொள்ள மாட்​டோம் என்​பதை உலத்​துக்​குத் தெளி​வாக எடுத்​துரைத்​தோம்.

பால​கோட் (பாகிஸ்​தான்) மீதான விமானத் தாக்​குதல் தொடங்​கி, ஆபரேஷன் சிந்​தூர் வரை இந்​திய வீரர்​கள் தங்​களது வீர, தீரத்​தைப் பறை​சாற்றி வரு​கின்​ற​னர். தற்​போது தீவிர​வா​தி​கள் ஏறெடுத்​துப் பார்த்​தால்​கூட அவர்​களுக்கு எதி​ராக மிகக் கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என்​பதை தெளிவுப்​படுத்தி உள்​ளோம்.

கடந்த 2008 செப்​டம்​பர் 13-ம் தேதி டெல்​லி​யில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்​தப்​பட்​டது. இதில் பலர் உயி​ரிழந்​தனர். சில வாரங்​கள் கழித்து நவம்​பர் 26-ம் தேதி மும்​பை​யில் மிகப்​பெரிய தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. அப்​போதே பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் மீது மிகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று வலி​யுறுத்​தப்​பட்​டது. ஆனால், எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை. தற்​போது தீவிர​வாதத்​துக்​குத் தகுந்த பதிலடி கொடுக்​கப்​பட்டு வரு​கிறது.

நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் மக்​கள்​தொகைக் கணக்​கெடுப்பு நடை​பெறுகிறது. இதற்​காக நீங்​கள் 15 முதல் 20 நிமிடங்​களை ஒதுக்க வேண்​டும். உங்​களு​டைய விவரங்​களை மொபைல் போன் வாயி​லாகநீங்​கள் பதிவு செய்ய முடி​யும்.

தமி​ழ​கத்​தின் மணப்​பாறையைச் சேர்ந்த தமிழ்த் துறை பேராசிரியர் செல்​வ​ராஜ் பழங்​கால சிற்​பங்​கள் மற்​றும் கோயில்​களைக் கண்​டறிந்து அவற்​றைப் பாது​காக்​கும் உன்னத முயற்​சி​யில் ஈடு​பட்டு உள்​ளார். இந்​தி​யா​வின் கலாச்​சா​ரம் மற்​றும் பாரம்​பரி​யத்​தைப் பாது​காக்க இது​போன்ற தனித்​து​வ​மான முயற்​சிகள் மிக முக்​கிய பங்கு வகிக்​கின்​றன.

குஜ​ராத்​தின் சோம​நாதர் கோயில் மீது கஜினி முகமது தாக்​குதல் நடத்​தி​னார். அந்​தக்கோயில் தற்​போது கம்​பீர​மாகக்காட்​சி​யளிக்​கிறது. இந்த ஆண்டை நாம் சோம​நாதர் சுயமரி​யாதை விழாவுடன் தொடங்​கினோம். கி.பி. 1026-ல் கஜினி முகமது படை​யின​ரால் சோம​நாதர் கோயில் அழிக்​கப்​பட்ட அதே ஆண்​டில் குஜ​ராத்​தின் புகழ்​பெற்ற மொதேரா சூரியக் கோயிலும் இடிக்​கப்​பட்​டது.

மொதேரா சூரியக் கோயில்: எனினும், முதலாம் பீமதேவன், கஜினி முகமதுவை எதிர்த்து நின்​றது மட்​டுமல்​லாமல், குறுகிய காலத்​துக்​குள்​ளேயே மொதேரா சூரியக் கோயிலை மீண்​டும் கட்​டி​யெழுப்​ப​வும் செய்​தார். வரலாற்​றுச் சிறப்​புமிக்க இந்த கோயிலுக்கு ஒரு முறை​யா​வது நீங்​கள் வருகை தர வேண்​டும்.

கடந்த 1926-ம் ஆண்டு செப்​டம்​பர் 27-ம் தேதி அசோக் சிங்​கால் பிறந்​தார். விஎச்பி மூத்த தலை​வ​ரான அவரது முயற்​சி​யால் அயோத்​தி​யில் பிரம்​மாண்ட ராமர் கோயில் கட்​டப்​பட்டு உள்​ளது. அவர் மறைந்​தா​லும் அவரது புகழ் வியாபித்து பரவி உள்​ளது. அவருடைய நூற்​றாண்டு பிறந்த நாளில் அவருக்கு மரி​யாதை செலுத்​துகிறேன்.

அக்​டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்​தி​யைக் கொண்​டாட உள்​ளோம். அவர் நமக்கு பல்​வேறு வாழ்க்கை தத்​து​வங்​களை அளித்​துள்​ளார். அவற்​றில் முக்​கிய​மானது தூய்​மை. காந்​தி​யடி​களின் வழியைப் பின்​பற்றி மத்​திய பிரதேசத்​தில் சில இளைஞர்​கள் நதி​யைத் தூய்​மைப்​படுத்​தும் பணி​களில் ஈடு​பட்டு வரு​கின்​ற​னர். ஆந்​தி​ரா​வில் சில இளைஞர்​கள் பழைய குளங்​களைத் தூய்​மைப்​படுத்தி வரு​கி​றார்​கள். மும்​பை​யில் சில இளைஞர்​கள் கடற்​கரைகளைத் தூய்​மைப்​படுத்தி வரு​கின்​ற​னர். இது​போன்ற தூய்​மைப் பணி​களே காந்​தி​யடிகளுக்கு நாம் செலுத்​தும் மரி​யாதை ஆகும்.

போதை ஒழிப்பு இயக்​கம்: லட்​சக்​கணக்​கான இந்​திய இளைஞர்​கள் போதைப் பழக்​கத்​துக்கு எதி​ரான இயக்​கத்​தில் இணைந்​துள்​ளனர். இந்த இயக்​க​மானது 100 வாரங்​கள் வரை நடத்​தப்​படும். ‘மை பாரத்​’​தின் தன்​னார்​வலர்​களும் இயக்​கத்​தில் உள்​ளனர். அவர்​களை மனதா​ரப் பாராட்​டு​கிறேன். போதைப் பழக்​கத்​தில் இருந்து வெளி​யேற விரும்​புவோருக்கு நாம் துணை நிற்க வேண்​டும்.

போதை​யில்லா இளைஞர்​கள், வளர்ச்​சி​யடைந்த இந்​தியா என்ற இயக்​கத்தை முன்​னெடுத்​துச் செல்ல வேண்​டும். அடுத்​தடுத்து பல்​வேறு பண்​டிகை​களைக் கொண்​டாட உள்​ளோம். இந்த நேரத்​தில் உள்​நாட்​டில் தயா​ரிக்​கப்​பட்ட பொருட்​களை மட்​டுமே வாங்க அழைப்பு விடுக்​கிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

<div class="paragraphs"><p>ஏ.செல்வராஜ்</p></div>

ஏ.செல்வராஜ்

மணப்பாறை பேராசிரியருக்குப் பாராட்டு

வானொலி உரையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசுக் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் ஏ.செல்வராஜை பிரதமர் மோடி பாராட்டி பேசினார். இதுகுறித்து பேராசிரியர் செல்வராஜ் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது: கல்லூரி மாணவி பூபதி மணப்பாறை அருகே கீழப்பளுவஞ்சி எனும் ஊரில் வீரக் கல் இருப்பதைத் தெரிவித்தார். அங்குச் சென்று ஆய்வு செய்த போது 3 வீரக்கற்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்.

வீரக்கல் என்பது ஒரு ஊரை, ஊரின் நீர் நிலைகளைப் பாதுகாப்பது போன்ற பொதுவான பணிகளில் ஈடுபட்டு உயிர் நீத்தவருக்கு வைக்கப்படும் சிற்பம் ஆகும். இதுபோல பல இடங்களில் ஆய்வு செய்து பழங்கால சிற்பங்கள்,கோயிலை கண்டறிந்தோம். அவற்றைத் தொடர்புபடுத்தி மாணவர்களுக்குப் பாடம் கற்பித்தேன். ஆய்வு செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் மேலும் நிறைய உள்ளன. எத்தனையோ நிபுணர்கள் உள்ள நிலையில், சாமானியரான என்னைப் பிரதமர் பாராட்டி பேசியது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு செல்வராஜ் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in