தவெக நிகழ்ச்சியில் நடனமாடிய அரசு பள்ளி தலைமை ஆசிரியை ‘சஸ்பெண்ட்’

கிருஷ்ணவேணி

கிருஷ்ணவேணி

Updated on
1 min read

தஞ்சாவூர்: தஞ்​சாவூர் மாவட்​டம் ஒரத்​த​நாட்​டில் தவெக சார்​பில் நடை​பெற்ற மகளிர் தின விழா​வில், திரைப்பட பாடலுக்கு நடன​மாடிய அரசுப் பள்​ளி தலைமை ஆசிரியை ‘சஸ்​பெண்ட்’ செய்​யப்​பட்​டுள்​ளார்.

ஒரத்​த​நாடு அருகே உள்ள பின்​னையூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் கிருஷ்ணவேணி (58). இவர், சங்​கர​நாதர் குடிக்​காடு ஊராட்சி ஒன்​றிய தொடக்​கப் பள்ளி​யில் தலைமை ஆசிரியை​யாகப் பணி​யாற்றி வந்​தார். மேலும், வெள்​ளைத்​தேவன்​விடுதி ஊராட்சி ஒன்​றிய தொடக்​கப் பள்​ளிக்கு பொறுப்பு தலைமை ஆசிரியை​யாக​வும் இருந்​தார்.

இந்​நிலை​யில், ஒரத்​த​நாட்​டில் தவெக சார்​பில், கடந்த சில நாட்​களுக்கு முன்பு மகளிர் தினவிழா கொண்​டாடப்​பட்​டது. இதில் கலந்​து​கொண்ட கிருஷ்ணவேணி, மேடை​யில், விஜய் நடித்த சிவ​காசி திரைப்​படத்​தில் இடம் பெற்ற, ‘கோடம்​பாக்​கம் ஏரி​யா’ என்ற பாடலுக்கு நடன​மாடி​னார்.

இதுதொடர்​பான வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகியது. இதுகுறித்து கல்​வித் துறை அதி​காரி​களுக்கு சென்ற புகாரின் அடிப்​படை​யில், பட்​டுக்​கோட்டை மாவட்ட தொடக்​கக் கல்வி அலு​வலர் மதி​யழகன் விசா​ரணை நடத்​தி, நன்​னடத்தை விதியை மீறி, அரசி​யல் கட்சி விழா​வில் கலந்​து​கொண்டு நடன​மாடியதற்​காக, கிருஷ்ணவேணியை ‘சஸ்​பெண்ட்’ செய்து மார்ச் 24-ம் தேதி உத்தரவிட்டார்.

இதுகுறித்து தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி கூறியதாவது: நாங்​கள் ஆண்​டு​தோறும் மகளிர் விழா நடத்​து​வது வழக்​கம். அதேபோல, தவெக மகளிர் தினவிழா நடத்​திய தனி​யார் மண்​டபத்​தில், அவர்​களின் விழா முடிந்​தவுடன், நாங்​கள் ஏற்​பாடு செய்த மகளிர் தின விழாவை நடத்தினோம்.

அப்​போது, அங்​கிருந்த தவெக பிளக்ஸ் பேனர் அகற்​றப்​ப​டா​மல் இருந்​தது. நான் அதை அகற்​றுமாறு கேட்​டு​கொண்​டும் பேனரை அகற்ற நேர​மாகும் என்​ப​தால், விட்டு விட்​டனர். இதனால், நான் தவெக நிகழ்ச்​சி​யில் ஆடிய​தாக ‘சஸ்​பெண்ட்’ செய்​துள்​ளனர். இதுதொடர்​பாக எனது வழக்​கறிஞரிடம் பேசி விளக்கம் அளிக்க உள்​ளேன் என்​றார்.

<div class="paragraphs"><p>கிருஷ்ணவேணி</p></div>
புதுச்சேரியில் தவெக கூட்டணி கட்சிக்கு பொது சின்னம் கோரிய மனு தள்ளுபடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in