பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டிஜிபி ஜெயராமன் மீதான வழக்கை ரத்து செய்ய அரசு தரப்பில் ஆட்சேபம்

மனு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு
பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டிஜிபி ஜெயராமன் மீதான வழக்கை ரத்து செய்ய அரசு தரப்பில் ஆட்சேபம்
Updated on
1 min read

சென்னை: சிறு​வனைக் கடத்​தி​ய​தாக எம்​எல்ஏ பூவை ஜெகன்​மூர்த்தி, கூடு​தல் டிஜிபி ஜெய​ராமன் மீது பதி​யப்​பட்ட வழக்கை ரத்து செய்​யக்​கூ​டாது என அரசுத் தரப்​பில் கடும் ஆட்​சேபம் தெரிவிக்​கப்​பட்​டதையடுத்​து, மனு வாபஸ் பெறப்​பட்​ட​தால் தள்​ளு​படி செய்து உத்தரவிடப்பட்டது.

திரு​வள்​ளூர் மாவட்​டம் களாம்​பாக்​கம் பகு​தி​யைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயயை காதலித்து திரு​மணம் செய்து கொண்​டார். இந்த திரு​மணத்​துக்கு விஜய​யின் பெற்​றோர் எதிர்ப்பு தெரி​வித்த நிலை​யில், மகளைத் தேடி தனுஷ் வீட்​டுக்​குச் சென்ற விஜய​யின் தந்தை உள்​ளிட்​டோர் வீட்​டில் இருந்த தனுஷின் தம்​பி​யான மைனர் சிறு​வனை கடத்​திச்​சென்று பின்​னர் நள்​ளிர​வில் மீனம்​பாக்​கம் அரு​கில் இறக்​கி​விட்​டுச் சென்​றனர்.

இதுகுறித்து தனுஷின் தாயார் அளித்த புகாரின் பேரில் புரட்சி பாரதம் எம்​எல்​ஏ பூவை ஜெகன்​மூர்த்​தி, கூடு​தல் டிஜிபி ஜெய​ராமன், பெண்​ணின் தந்தை வனராஜா, முன்​னாள் எஸ்ஐ மகேஸ்​வரி உள்​ளிட்​டோர் மீது வழக்​குப்​ப​திவு செய்​யப்பட்டது.

இந்​நிலை​யில் இந்த விவ​காரத்​தில் தங்​களுக்​குள் சமரசம் ஏற்​பட்​டு​விட்​டது என்​ப​தால், தங்​கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்​டுமெனக்​கோரி வனராஜா உள்​ளிட்ட 3 பேர் நீதி​மன்​றத்​தில் மனுத் தாக்​கல் செய்​திருந்​தனர்.

இதன் மீதான விசா​ரணை நீதிபதி ஜி.ஜெயச்​சந்​திரன் முன்​பாக நடந்​தது. அப்​போது காவல் துறை தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் கே.எம்​.டி.​முகிலன், “குற்​றம்​சாட்​டப்​பட்டவர்களில் ஒரு​வர் எம்​எல்ஏ, மற்​றொரு​வர் காவல்​துறை உயர​தி​காரி, மற்​றொரு பெண் முன்​னாள் எஸ்ஐ.

தற்​போது அவர்​களுக்​குள் சமரச​மாகி​விட்​டது எனக்​கூறி வழக்கை ரத்து செய்​தால் அது தவறான முன்​னு​தா​ரண​மாகி​விடும். மக்​கள் போலீ​ஸார் மீதும், நீதித்​துறை மீதும் வைத்​துள்ள நம்​பிக்கை வீணாகி​விடும்.

எனவே இந்த வழக்கை ரத்து செய்​யக்​கூ​டாது. விசா​ரணையை முடிக்க கூடு​தல் அவகாசம் அளிக்க வேண்​டும்” என்று தெரி​வித்​தார்.

மனுவை வாபஸ் பெறு​வ​தாக மனு​தா​ரர்​கள் தெரிவித்ததை ஏற்ற நீதிப​தி, மனுவை வாபஸ் பெற அனு​ம​தித்து தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டார்.

பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டிஜிபி ஜெயராமன் மீதான வழக்கை ரத்து செய்ய அரசு தரப்பில் ஆட்சேபம்
ஊட்டி | பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை ஆயுள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in