ஊட்டி | பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை ஆயுள்

ஊட்டி | பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை ஆயுள்
Updated on
1 min read

ஊட்டி: பெண்ணுக்கு பாலியல் வன்​கொடுமை செய்​த குற்​றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்​டனை விதித்து உதகை மகளிர் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தது.

நீல​கிரி மாவட்​டம் ஊட்டி மஞ்​சனக்​கொரை பகு​தி​யைச் சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் 42 வயது பெண் ஒருவர் அங்குள்ள பானிபூரி கடை​யில் பணிபுரிந்து வந்​தார்.

இந்​நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணி முடிந்து வீடு திரும்​பிக் கொண்​டிருந்​தபோது, இளைஞர் ஒரு​வர் வழிமறித்து அவரை பாலியல் வன்​கொடுமை செய்துவிட்டு தப்​பினார்.

அந்த பெண்ணின் உறவினர்​கள் அவரை மீட்டு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​தனர். இதுகுறித்த புகாரின்​பேரில் ஊட்டி கீழ்​தலை​யாட்டு மந்து பகு​தி​யைச் சேர்ந்த சதீஷ்கு​மார் (26) என்​பவர் கைது செய்​யப்​பட்​டார்.

இந்த வழக்கு விசா​ரணை ஊட்டி மகளிர் நீதி​மன்​றத்​தில் நடந்து வந்​தது. இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி செந்​தில்​ கு​மார், குற்​ற​வாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்​டனை விதித்து தீர்ப்பளித்​தார்.

பாதிக்​கப்​பட்ட பெண்​ணுக்கு ரூ.5 லட்​சம் இழப்​பீ​டாக வழங்க மாவட்ட ஆட்​சி​யர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

ஊட்டி | பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை ஆயுள்
தமிழகத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்: பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in