போதை இல்லா தமிழகத்தை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்: ஆளுநர், கட்சித் தலைவர்கள் உறுதி

போதை இல்லா தமிழகத்தை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்: ஆளுநர், கட்சித் தலைவர்கள் உறுதி
Updated on
1 min read

சென்னை: போதை இல்லா தமிழகத்தை நோக்கி அனை​வரும் ஒன்​றிணைந்து செயல்​படு​வோம் என்று ஆளுநர், தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சர்​வ​தேச போதைப்​பொருள் ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்​கப்​பட்​டது.

இதையொட்டி ஆளுநர் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர்: போதை பழக்​கம் என்​பது தனி​நபரின் வாழ்க்​கையை மட்​டுமல்​லாது அவர்​களது குடும்​பங்​களை​யும், சமூகத்​தின் எதிர்​காலத்​தை​யும் பாதிக்​கக்​கூடியது.

போதை இல்​லாத சமூகத்தை உரு​வாக்க விழிப்​புணர்வை ஏற்​படுத்​தி, ஆரோக்​கிய​மான வாழ்க்கை முறையை ஊக்​கு​விப்​போம். போதைப்பொருள் ஒழிப்பு தினத்​தில் ஒன்​றிணைந்து போதை​யில்லா ஆரோக்​கிய​மான, வலிமை​யான, வளமான தமிழகத்தை உரு​வாக்க உறு​தி​யேற்​போம்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: சர்​வ​தேச போதைப்​பொருள் ஒழிப்பு தினத்​தில், போதைப்​பொருளுக்கு எதி​ராக விழிப்​புணர்வை ஏற்​படுத்​தி, ஆரோக்​கிய​மான மற்​றும் பொறுப்​பான சமூகத்தை உரு​வாக்க அனை​வரும் உறு​தி​யேற்​போம்.

இளைஞர்​களின் கனவு​களை காக்​க​வும், நாட்​டின் எதிர்​காலத்தை வளப்​படுத்​த​வும் போதை​யில்லா சமு​தா​யத்தை உரு​வாக்க அனை​வரும் இந்த போதைப்​பொருட்​களை அழிப்​ப​தற்கு பாடு​படு​வோம்.

ஐஜேகே தலை​வர் ரவிபச்​ச​முத்​து: அண்​மைக்​கால​மாக போதைப்​பொருள் பழக்​கத்​தால் பல இளைஞர்​களின் வாழ்க்கை பாதிக்​கப்​படு​வது மிகுந்த கவலை​யளிக்​கிறது.

இளமை​க்காலம் போதை​யில் வீழ்ந்​தால், எதிர்​காலம் இருளில் மூழ்​கும். எனவே, போதை இல்​லாத வளமான தமிழகம் என்ற இலக்கை நோக்கி அனை​வரும் ஒன்​றிணைந்து செயல்​படு​வோம் என சர்​வ​தேச போதைப்​பொருள் ஒழிப்பு தினத்​தில் உறு​தி​யேற்​போம்.

இளைஞர்​கள் போதைப்​பொருள் போன்ற தீய பழக்​கங்​களி​லிருந்து வில​கி, ஒழுக்​கம் நிறைந்த வாழ்க்​கை​யை வாழ வேண்​டும்​ என்​ப​தை உறு​திசெய்​வோம்​.

போதை இல்லா தமிழகத்தை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்: ஆளுநர், கட்சித் தலைவர்கள் உறுதி
சென்னையில் நாளை 1,641 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in