முதல்வர் விஜய்யை இழிவாக பேசியதாக ஆ.ராசா மீது பெரம்பலூர் அரசு மருத்துவர் புகார்

ஆ.ராசா |கோப்புப் படம்

ஆ.ராசா |கோப்புப் படம்

Updated on
1 min read

பெரம்பலூர்: முதல்வர் விஜய் குறித்து திமுக எம்.பி ஆ.ராசா இழிவாக பேசியதாக குற்றம்சாட்டி பெரம்பலூர் எஸ்பியிடம் அரசு மருத்துவர் புகார் அளித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் ராசா மணிகண்டன். இவர் திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா மீது பெரம்பலூர் எஸ்.பி லலித்குமாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அப்புகார் மனுவில் கூறியிருப்பதாவது: திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதி முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழா நடந்தது. இந்த விழாவில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். நீலகிரி தொகுதி எம்பி ஆ.ராசாவும் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் எம்.பி ஆ.ராசா பேசும்போது, தமிழகத்தில் அண்ணாவும், ராஜாஜியும் இருந்த பதவியில் இன்று நாதாரி தலைவர்கள் முதல்வர்களாக அமர்ந்து இருக்கிறார்கள் என்று முதல்வர் ஜோசப் விஜய்யை இழிவுபடுத்தும் படி பேசினார். இது அரசியல் நாகரிகத்திற்கு முரணானது, பொதுமக்களிடையே கருத்து மோதல்களை ஏற்படுத்தியுள்ளது.பொது வெளியில் ஒரு எம்.பி இப்படி பேசியிருக்கக்கூடாது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.

கருத்துச் சுதந்திரத்துக்கும், அரசியல் அமைப்பு சட்டத்துக்கும் உரிய மதிப்புளிக்காமல் ஆ.ராசா பேசியுள்ளார். இது தமிழக முதல்வரை இழிவுபடுத்தும் செயல். எனவே பெரம்பலூர் போலீஸார், எம்.பி ஆ.ராசா மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் ராசா மணிகண்டன் கூறியுள்ளார்.

அந்த மனுவை வாங்கிய எஸ்பி லலித்குமார் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால் இதுவரை மருத்துவர் ராசா மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று எஸ்பி அலுவலகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>ஆ.ராசா |கோப்புப் படம்</p></div>
“நான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை” - சென்னை திரும்பிய எ.வ.வேலு பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in