கோயிலை தனிப்பட்ட சொத்தாக அரசு கருத முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி

கோயிலை தனிப்பட்ட சொத்தாக அரசு கருத முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி
Updated on
1 min read

மதுரை: கள்ளழகர் கோயிலில் ரூ.40 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்வது தொடர்பான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், கோயிலை அரசு தனிப்பட்ட சொத்தாக கருதி முடிவெடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

மதுரை அழகர்கோயிலில் வணிக நோக்கில் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரி மேலூர் வெள்ளரிப்பட்டி பிரபு, நாகை திருக்கணாபுரம் வெங்கடேஷ் சவுரிராஜன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு விசாரித்து தீர்ப்பை தள்ளிவைத்தது.

இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கள்ளழகர் கோயிலில் அறங்காவலர் குழு இல்லாமல் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு கோயிலை அரசு தனிப்பட்ட சொத்தாக கருதி முடிவெடுக்க முடியாது. எனவே, அழகர்கோயில் நிதி ரூ.40 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி அரசு பிறப்பித்த அரசாணை ரத்துசெய்யப்படுகிறது. கோயில் நிதி ரூ.107 கோடியில் இருந்து ரூ.62 கோடியாக குறைந்துள்ளது. கோ​யில் தணிக்கை விவரங்​களை 2 வாரங்​களில் தாக்​கல் செய்ய வேண்​டும்.

அழகர் கோயிலுக்கு புதிய அறங்​காவலர் குழுவை அமைக்க உடனடி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டும். செயல் அலு​வலர் நியமிக்​கப்​பட்டு 5 ஆண்​டு​களுக்கு மேலாகி​யிருந்​தால், அவரை நீக்​கி​விட்​டு, நிர்​வாகம் தெரிந்த மேலா​ளரை நியமிக்க வேண்​டும். கோயி​லின் தற்​போதைய நிலப்​பரப்​பிலும், 1925-ம் ஆண்டு தலபு​ராணத்​தில் உள்ள வரைபடத்​தி​லும் பல்​வேறு வேறு​பாடு​கள் உள்​ளன. வளர்ச்சி என்ற பெயரில் செய்​யப்​படும் அனைத்து நடவடிக்​கைகளும், கோயி​லின் நெறி​முறை​களு​டன் ஒத்​துப்​போக வேண்​டும்.

கள்​ளழகர் கோயி​லில் மறுசீரமைப்பு பணி​களை உடனடி​யாக தொடங்க வேண்​டும். பழைய நினை​வுச் சின்​னங்​களை மறைக்​கும் வகை​யில் கட்​டு​மானங்​கள் மேற்​கொள்​வதை நிறுத்த வேண்​டும். அழகர்​கோயி​லில் பிராணி​களை பலி​யிடும் வழக்​கத்​தில் நீதி​மன்​றம் தலை​யிட விரும்​ப​வில்​லை. கோயி​லின் அக்னி புஷ்கரணிக்கு அரு​கில் பணி​யாளர் குடி​யிருப்​பு, கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைக்​கக் கூடாது.

அந்த திட்​டங்​களுக்கு செலவிடப்​பட்ட தொகை​யை, அரசு கோயில் நிர்​வாகத்​துக்கு திரும்ப வழங்க வேண்​டும். புனித தீர்த்​தத்​துக்கு அரு​கில் கட்டுமானங்களை மேற்கொள்ள அதி​காரி​கள் முடி​வெடுத்​தது வேதனை​யானது.

கோயில்​களில் நடை​பெறும் வளர்ச்சி நடவடிக்​கைகளை விதி​முறை​களைப் பின்​பற்​றி, பழமை மாறாலும், தெய்​வீக அழகைப் பாது​காக்​கும் வகை​யிலும் மேற்​கொள்ள வேண்​டும். இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​பட்​டது தொடர்​பாக 3 மாதங்​களில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தர​வில்​ கூறி​யுள்​ளனர்​.

கோயிலை தனிப்பட்ட சொத்தாக அரசு கருத முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி
“இம்முறை எங்கள் தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும்” - கனிமொழி கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in