முதுகுளத்தூரில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.10 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்

சாயல்குடி அருகே  பறிமுதலான நகைகள் முதுகுளத்தூர் துணை வட்டாட்சியர் ராஜ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

சாயல்குடி அருகே பறிமுதலான நகைகள் முதுகுளத்தூர் துணை வட்டாட்சியர் ராஜ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

Updated on
1 min read

ராம​நாத​புரம்: ராம​நாத​புரம் மாவட்​டம் முதுகுளத்​தூர் தொகு​தி​யில் உரிய ஆவணமின்றி எடுத்​துச் சென்ற ரூ.9.47 கோடி மதிப்​பிலான தங்​க வைர, வெள்ளி நகைகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

முதுகுளத்​தூர் தொகுதி தேர்​தல் நிலை​யான கண்​காணிப்​புக் குழு அலு​வலர் ராஜேஸ்​வரன் தலைமையி​லான பறக்​கும் படை​யினர் சாயல்​குடி அருகே கிழக்​குக் கடற்​கரைச் சாலை​யில் உள்ள கன்​னி​ராஜபுரம் சோதனைச் சாவடி​யில் சனிக்​கிழமை இரவு வாக​னத் தணிக்​கை​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது தூத்​துக்​குடி சாலை வழி​யாக திருப்​பரங்​குன்​றம் ஹார்​விபட்​டியைச் சேர்ந்த செல்​வகு​மார் மகன் ராஜா (36) என்​பவர் காரில் வந்​தார். காரை தேர்​தல் பறக்​கும் படை​யினர் சோதனை​யிட்​ட​தில் 18 பெட்​டிகளில் தங்​கம், வைரம், வெள்ளி நகைகள் இருந்​தன.

விசா​ரணை​யில் மதுரை​யில் உள்ள ஒரு தனி​யார் நிறு​வனத்​தைச் சேர்ந்த நகைகள் என்றும், ஆர்டரின் பேரில் எடுத்துச் செல்​வதாக​வும் கூறி​னார்.

ஆனால், உரிய ஆவணங்​கள் இல்லாததால் ரூ.9.47 கோடி நகைகள் பறி​முதல் செய்யப்பட்டு முதுகுளத்தூர் துணை வட்டாட்​சி​யர் ராஜ்கு​மாரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது.

<div class="paragraphs"><p>சாயல்குடி அருகே  பறிமுதலான நகைகள் முதுகுளத்தூர் துணை வட்டாட்சியர் ராஜ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டன.</p></div>
தென் மாவட்டங்களில் நாளை முதல் சசிகலா பிரச்சாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in