செஞ்சி அருகே 10 நாட்களாக மாயம்: 7 வயது சிறுமி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

செஞ்சி அருகே 10 நாட்களாக மாயம்: 7 வயது சிறுமி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
Updated on: 
1 min read

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தில் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு பெற்றோருடன் வீட்டில் தூங்கிய 7 வயது சிறுமி கடந்த 12-ம் தேதி அதிகாலை மாயமானார்.

சிறுமியைக் கண்டுபிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. 3 கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. செல்போன் டவர்களின் பதிவான 600-க்கும் மேற்பட்ட அழைப்புகளில் தொடர்புடையவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சந்தேகிக்கும் நபர்கள் என 250-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

10-வது நாளான நேற்றும், வழக்கு விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றம் ஏற்படவில்லை. கண்களைக் கட்டி, காட்டில் விடப்பட்ட நிலையில், துப்பு கிடைக்காமல் தனிப்படை போலீஸார் தவிக்கின்றனர்.

மாயமான சிறுமியை 10 நாட்கள் கடந்தும் கண்டுபிடிக்க தவறிய தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து திமுக சார்பில் ஆரணி மக்களவை உறுப்பினர் தரணிவேந்தன் தலைமையில் ஆலம்பூண்டியில் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சிறுமி மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

செஞ்சி அருகே 10 நாட்களாக மாயம்: 7 வயது சிறுமி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
வீட்டு வரி விதிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம்: கோவை மாநகராட்சி வரி வசூலர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in