வீட்டு வரி விதிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம்: கோவை மாநகராட்சி வரி வசூலர் கைது

வீட்டு வரி விதிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம்: கோவை மாநகராட்சி வரி வசூலர் கைது
Updated on: 
1 min read

கோவை: கோவை இடையர்பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் (25). கட்டிட ஒப்பந்ததாரர். இவர் வெள்ளகிணறு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.

இதற்கான வீட்டு வரி நிர்ணயக்க கோரி, மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் சந்தோஷ் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த வரி வசூலர் பிரதீப் குமார் (33), ரூ.40 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என கேட்டுள்ளார்.

அலுவலகத்தில் வைத்து நேற்று சந்தோஷிடம் இருந்து பிரதீப்குமார் பணத்தை பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையிலான போலீஸார் உள்ளே புகுந்து பிரதீப்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

வீட்டு வரி விதிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம்: கோவை மாநகராட்சி வரி வசூலர் கைது
தாராபுரம் நாதக வேட்பாளர் உட்பட 12 பேர் சிறையில் அடைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in