பிளஸ் 2 மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ரவுடிக்கு மரண தண்டனை: இருவருக்கு சிறை

நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு
பிளஸ் 2 மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ரவுடிக்கு மரண தண்டனை: இருவருக்கு சிறை
Updated on
1 min read

திருநெல்வேலி: ​திருநெல்​வேலி மாநகரப் பகு​தி​யில் பிளஸ் 2 மாணவி கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்​கில், ரவுடிக்கு மரண தண்​டனை​யும், அவரது கூட்​டாளி​கள் 2 பேருக்கு சிறை தண்​டனை​யும் விதித்​து, போக்சோ சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தது.

திருநெல்​வேலி மாநகரைச் சேர்ந்த பெற்​றோரை இழந்த, 16 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வந்​தார். கடந்த 2022-ம் ஆண்டு திருநெல்​வேலி​யில் உள்ள தேவால​யத்​தில் வர்​ணம் பூசும் பணிக்கு வந்த, விளாத்​தி​குளத்​தைச் சேர்ந்த முனீஸ்​வரன் என்​பவருடன், மாணவிக்கு பழக்​கம் ஏற்​பட்​டது. மாணவிக்கு பெற்​றோர் இல்​லாததை அறிந்த முனீஸ்​வரன், ஆசை​வார்த்​தை கூறி மாண​வியை கீழ​வீர​ராகவபுரம் காட்​டுப்​பகு​தி​க்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு மாண​வியை முனீஸ்​வரன், அவரது கூட்​டாளி​களான கீழ​வீர​ராகவபுரத்தைச் சேர்ந்த சின்​னக்​குட்​டி,முரு​கேசன் ஆகியோர் கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளனர். மாண​வி​யின் அந்​தரங்க புகைப்​படங்​களை எடுத்துவைத்​துக்​கொண்​டு, அதைக்​காட்டி மிரட்​டி, தொடர்ந்து வன்​கொடுமை செய்துவந்​தனர்.

இந்​நிலை​யில், அந்த மாண​வி​யின் அந்​தரங்க புகைப்​படங்​கள் சமூக வலை​தளத்​தில் பரவிய நிலை​யில், பாளை​யங்​கோட்டை மகளிர் காவல் நிலை​யத்​தில், மாண​வி​யின் தரப்​பைச் சேர்ந்த ஒரு​வர் புகார் அளித்​தார். அதன்​பேரில், போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின்​கீழ் வழக்கு பதிந்து முனீஸ்​வரன், சின்​னக்​குட்​டி, முரு​கேசன் ஆகிய 3 பேரை​யும் கைது செய்​தனர்.

இந்த வழக்கு விசா​ரணை திருநெல்​வேலி போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்ற நிலை​யில் நேற்று இறுதி தீர்ப்புவழங்​கப்​பட்​டது. இதில் மாணவிக்கு தொடர் பாலியல் சித்​தர​வதை செய்த சின்​னக்​குட்​டிக்கு மரண தண்​டனை​யும், முனீஸ்​வரனுக்கு 13 ஆண்​டு​கள், முரு​கேசனுக்கு 20 ஆண்​டு​கள் சிறை தண்​டனை​யும் விதித்து நீதிபதி சுரேஷ்கு​மார் உத்​தர​விட்​டார். சின்​னக்​குட்​டி, முரு​கேசன் ஆகியோர் மீது ஏற்​கெனவே கொலை வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. மேலும், இவர்​கள் 2 பேரை​யும் ரவுடிகள் பட்​டியலில் போலீ​ஸார் வைத்துள்ளனர்.

திருநெல்​வேலி போக்சோ சிறப்பு நீதிமன்​றத்​தில் இந்த ஆண்​டில் மட்​டும் 4 பேருக்கு மரண தண்​டனை விதித்​து, நீதிபதி சுரேஷ்கு​மார் தீர்ப்பளித்துள்​ளார். மேலும், இந்த நீதி​மன்​றத்​தில் இது​வரை போக்சோ வழக்​கு​களில் 10 பேருக்கு மரண தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

பிளஸ் 2 மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ரவுடிக்கு மரண தண்டனை: இருவருக்கு சிறை
தமிழகத் தேர்தலில் வாக்களித்த இலங்கை நபரின் மனு தள்ளுபடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in