தமிழகத் தேர்தலில் வாக்களித்த இலங்கை நபரின் மனு தள்ளுபடி

தமிழகத் தேர்தலில் வாக்களித்த இலங்கை நபரின் மனு தள்ளுபடி
Updated on
1 min read

மதுரை: தமிழகத் தேர்​தலில் வாக்​களித்த இலங்கை குடி​யுரிமை பெற்​றவர் இலங்​கைக்​குச் செல்ல அனு​மதி கோரி தாக்​கல் செய்த மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது.

தமிழக சட்​டப் பேர​வைத் தேர்​தலில் வாக்​களித்த இலங்கை குடி​யுரிமை பெற்ற ஜெய ஆனந்​தன் என்​பவரை போலீ​ஸார் கைது செய்​தனர். இவர் இலங்கை செல்ல அனு​மதி கோரி உயர் நீதி​மன்றத்தில் மனுத் தாக்​கல் செய்​தார். மனுவை நீதிபதி எல்​.விக்​டோரி​யா கெளரி விசா​ரித்​தார். பின்​னர், இந்​திய குடி​யுரிமை என்ற அடிப்​படைத் தகுதி இல்​லாத ஒரு​வரின் பெயர் தேர்தலில்இடம் பெற்றிருப்​பது வாக்களிக்​ கும் உரிமையை தராது.

ஒரு​வர் வெளி​நாடு செல்​வது தனி​நபர் சுதந்​திரத்​தின் ஒரு பகு​தி​யாக இருந்​தா​லும், அவர் குற்​ற​வியல் விசா​ரணையை எதிர்​கொள்வதால் அந்த உரிமை​யைச் சட்​டப்​படி கட்​டுப்​படுத்த முடி​யும். எனவே மனு​தா​ரரின் கோரிக்கை நிராகரிக்​கப்​படு​கிறது. மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது என உத்​தர​விட்​டார்.

தமிழகத் தேர்தலில் வாக்களித்த இலங்கை நபரின் மனு தள்ளுபடி
திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தடை நீட்டிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in