நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்து வழக்கு: குற்றச்சாட்டுப் பதிவு ஜூலை 24-க்கு தள்ளிவைப்பு

நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்து வழக்கு: குற்றச்சாட்டுப் பதிவு ஜூலை 24-க்கு தள்ளிவைப்பு
Updated on
1 min read

செங்​கல்​பட்டு: புதுச்​சேரி​யில் இருந்து சென்​னையை நோக்கி யாஷிகா ஆனந்த் தனது நண்​பர்​களு​டன் காரில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் பயணம் செய்​த​போது, மாமல்​லபுரம் அருகே கார் விபத்​துக்​குள்​ளானது.

இந்த விபத்​தில் அவரது தோழி பவானி செட்டி உயி​ரிழந்​தார். மேலும், யாஷிகா ஆனந்த் உள்​ளிட்ட சிலர் காயமடைந்து மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்​றனர்.

இதுதொடர்​பாக மாமல்​லபுரம் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தி, நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​தனர். இந்த வழக்கு நேற்று செங்​கை மகிளா நீதி​மன்ற அமர்வு நீதிபதி சசிகலா முன்பு விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது எதிர் மனு​தா​ர​ரான நடிகை யாஷிகா ஆனந்த் நீதி​மன்​றத்​தில் ஆஜராக​வில்​லை. இதையடுத்​து, அவர் ஆஜரா​காததற்​கான மனு நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டது.

அந்த மனுவை ஏற்​றுக்​கொண்ட நீதிப​தி, வழக்​கில் குற்​றச்​சாட்​டுப் பதிவு (Framing of Charges) மற்​றும் அதுதொடர்​பான அடுத்​தகட்ட நடவடிக்​கைகளுக்​காக விசா​ரணையை ஜூலை 24-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்​தர​விட்​டார்.

அன்​றைய தினம் வழக்​கில் குற்​றச்​சாட்​டுப் பதிவு செய்​யும் நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படும் என நீதி​மன்​ற வட்​டாரங்கள் தெரிவித்தன.

நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்து வழக்கு: குற்றச்சாட்டுப் பதிவு ஜூலை 24-க்கு தள்ளிவைப்பு
கடல்நீரை குடிநீராக்கும் ஆலை விரிவாக்கம்: பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in