கடல்நீரை குடிநீராக்கும் ஆலை விரிவாக்கம்: பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

கடல்நீரை குடிநீராக்கும் ஆலை விரிவாக்கம்: பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
Updated on
1 min read

மாமல்லபுரம்: ​பு​தி​தாக அமைக்​கப்​பட்டு வரும் கடல்​நீரை குடிநீ​ராக்​கும் திட்​டப் பணி​களை விரைந்து முடித்து, பொது​மக்​கள் பயன்​பாட்​டுக்கு கொண்​டுவர வேண்​டுமென, முதல்​வர் விஜய் அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தி​னார்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், மாமல்​லபுரம் அருகே நெம்​மேலி​யில் சென்னை குடிநீர் வழங்​கல் மற்​றும் கழி​வுநீரகற்று வாரி​யம் சார்​பில், தின​மும் 110 எம்​எல்டி மற்​றும் 150 எம்​எல்டி உற்​பத்​தித் திறன் கொண்ட 2 கடல்​நீரைக் குடிநீ​ராக்​கும் நிலை​யங்​கள் இயங்கி வரு​கின்​றன.

இதன்​மூலம், தென்சென்னை பகு​தி​களில் வாழும் சுமார் 20 லட்​சம் மக்​கள் பயன்​பெறுகின்​றனர். மேலும், பொது​மக்​களின் கூடு​தல் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்​யும் வகை​யில், பேரூர் பகு​தி​யில் ரூ.5,814 கோடி​யில், தின​மும் 400 மில்​லியன் லிட்​டர் உற்​பத்​தித் திறன் கொண்ட கடல்​நீரை குடிநீ​ராக்​கும் நிலை​யம் அமைக்க முடி​வானது.

இத்​திட்டப் பணி​களை 2023-ம் ஆண்டு முன்​னாள் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்​கி ​வைத்​தார். இதையடுத்து, அந்​தப் பகு​தி​யில் குடிநீர் ஆலை அமைக்​கும் பணி​கள் நடை​பெற்​று ​வரு​கின்​றன. இதற்​கான கட்​டு​மானப் பணி​கள் சுமார் 70 சதவீதம் நிறைவடைந்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், புதிய கடல்​நீரை குடிநீ​ராக்​கும் ஆலை​யின் கட்​டு​மான பணி​கள் மற்​றும் ஏற்​கனவே இயங்​கிவரும் ஆலைகளை முதல்​வர் விஜய் நேற்று நேரில் பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார். அப்​போது, குடிநீர் உற்​பத்தி திறன் குறித்து அதி​காரி​களிடம் கேட்​டறிந்​தார்.

மேலும்,ஆலை​யின் கட்​டு​மானப் பணி​கள் மற்​றும் பேரூரில் இருந்து போரூர் வரை 59 கிலோ மீட்​டருக்கு குடிநீர்க் குழாய்​கள் பதிக்​கும் பணி​கள் குறித்து அதி​காரி​களிடம் கேட்​டறிந்​தார்.

பின்பு திட்​டப்​பணி​களை விரைந்து முடித்து மக்​கள் பயன்​பாட்​டுக்கு கொண்​டு​வர​வும், நெம்​மேலி​யில் தற்​போது உள்ள ஆலைகளைச் சிறந்த முறை​யில் பராமரித்​து, தட்​டுப்​பாடின்றி குடிநீர் வழங்​க​வும் அலு​வலர்​களுக்கு முதல்​வர் அறி​வுறுத்​தி​னார்.

இந்த புதிய பேரூர் ஆலை பயன்​பாட்​டுக்கு வரும்​போது, சென்னை மாநக​ராட்​சி, தாம்​பரம் மாநக​ராட்சி மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள 20 ஊராட்​சிகளைச் சேர்ந்த சுமார் 22.67 லட்​சம் மக்​கள் பயனடை​வார்​கள்.

இந்த ஆய்​வின்​போது, அமைச்​சர் த.சரத்​கு​மார், நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி மற்​றும் துறை​சார்ந்த அலு​வலர்​கள் உடனிருந்​தனர்.

இதற்​கிடையே ஆலை​யின் முகப்​புப் பகு​தி​யில் முன்​னாள் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பெயர் பொறிக்​கப்​பட்ட கல்​வெட்டு இருந்​தது. அதிலிருந்த ஸ்டா​லின் பெயர் அகற்​றப்​பட்​ட​தாக கூறி திமுக​வினர் கண்​டனம் தெரி​வித்​தனர்.

ஆனால், ஆலை நிர்​வாகம் பராமரிப்​புப் பணி​களுக்​காக பெயர் அகற்​றப்​பட்​டுள்​ள​தாக​வும், பணி​கள் முடிந்​ததும் மீண்​டும் பெயர் பொறிக்​கப்​படும் எனவும் துறை அதி​காரி​கள் விளக்​கம் அளித்​தனர்.

கடல்நீரை குடிநீராக்கும் ஆலை விரிவாக்கம்: பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
மேகேதாட்டுவில் அணை கட்டினால் கர்நாடக அரசுக்கு எதிராக போராடுவோம்: தமிழக காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in