பெரம்பலூரில் பாத யாத்திரை சென்றபோது கார் மோதியதில் 4 பெண் பக்தர்கள் பரிதாப உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே கார் மோதியதில் உயிரிழந்த மலர்க்கொடி, சசிகலா, விஜயலட்சுமி, சித்ரா.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே கார் மோதியதில் உயிரிழந்த மலர்க்கொடி, சசிகலா, விஜயலட்சுமி, சித்ரா.

Updated on
1 min read

பெரம்​பலூர்: ​திருச்சி சமயபுரம் மாரி​யம்​மன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்று கொண்​டிருந்த பக்​தர்​கள் மீது நேற்று அதி​காலை கார் மோதி​ய​தில் 4 பெண்​கள் உயி​ரிழந்​தனர்.

கடலூர் மாவட்​டம் பெண்​ணாடத்தை அடுத்த தொளார்​குடிக்​காடு கிராமத்​தைச் சேர்ந்​தவர்​கள் சுப்​பிரமணி​யன் மனைவி மலர்க்​கொடி(35), திரு​நாவுக்​கரசு மனைவி சசிகலா (47), சுப்​பிரமணி மனைவி விஜய லட்​சுமி(40), பரமசிவம் மனைவி ஜோதிலட்​சுமி(57), சேலம் மாவட்​டம் கெங்​கவல்லி கிராமத்​தைச் சேர்ந்த மருத​முத்து மனைவி சித்​ரா(40).

இவர்​கள் உள்​ளிட்ட சிலர் தைப்​பூசத்​தையொட்டி சமயபுரம் மாரி​யம்​மன் கோயிலுக்கு பாத யாத்திரை புறப்​பட்​டனர். திருச்​சி-சென்னை தேசிய நெடுஞ்​சாலை​யில் பெரம்​பலூரை அடுத்த சிறு​வாச்​சூர் பகு​தி​யில் நேற்று அதி​காலை சென்று கொண்​டிருந்​த​போது, சென்​னை​யில் இருந்து திருச்சி நோக்​கிச் சென்ற கார் எதிர்​பா​ராத​வித​மாக பாத யாத்திரை பக்​தர்​கள் மீது மோதி​யது.

இதில் பலத்த காயமடைந்த மலர்க்​கொடி, சசிகலா, விஜய லட்​சுமி ஆகியோர் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். விபத்து குறித்த தகவலறிந்த நெடுஞ்​சாலை ரோந்​துப் போலீ​ஸார் மற்​றும் பெரம்​பலூர் நகர போலீ​ஸார் விரைந்து சென்​று, காயமடைந்த சித்​ரா, ஜோதிலட்​சுமி ஆகியோரை மீட்​டு, பெரம்​பலூர் அரசு தலைமை மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

ஆனால், வழி​யிலேயே சித்ரா உயி​ரிழந்​தார். உயி​ரிழந்​தவர்​களின் உடல்​கள் பிரேதப் பரிசோதனைக்​காக பெரம்​பலூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பிவைக்​கப்​பட்​டன. ஜோதிலட்​சுமிக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

கார் ஓட்டுநர் கைது: விபத்து நேரிட்ட இடத்தை மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அனி​தா, கோட்​டாட்​சி​யர் அனிதா ஆகியோர் பார்​வை​யிட்டு விசா​ரணை நடத்​தினர். காரை ஓட்டி வந்த சென்னை திரிசூலம் ஈஸ்​வரன் கோயில் தெரு​வைச் சேர்ந்த சுரேஷ் மகன் கவுதம்​(24) என்​பவரை பெரம்​பலூர்​ நகர போலீ​ஸார்​ கைது செய்​து, வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

<div class="paragraphs"><p>பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே கார் மோதியதில் உயிரிழந்த மலர்க்கொடி, சசிகலா, விஜயலட்சுமி, சித்ரா.</p></div>
பாபநாசம் அருகே சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை: 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in