ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடை வாங்கிக் கொடுத்த முன்னாள் எம்எல்ஏ 

ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடை வாங்கிக் கொடுத்த முன்னாள் எம்எல்ஏ 
Updated on: 
1 min read

ராஜபாளையம்: ராஜபாளையம் திமுக முன்னாள் எம்எல்ஏ தங்கப்பாண்டியன், காப்பகங்களில் உள்ள 227 ஆதரவற்ற குழந்தைகளை கடைக்கு அழைத்துச் சென்று தீபாவளி புத்தாடைகளை வாங்கி கொடுத்தார்.

ராஜபாளையம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு 2016 முதல் 2026 வரை எம்எல்ஏவாக இருந்தவர் தங்கப்பாண்டியன். இவர் 2017-ம் ஆண்டிலிருந்து தீபாவளி பண்டிகைக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகளை வாங்கி கொடுத்து வருகிறார்.

தற்போது 10-வது ஆண்டாக பொன்னகரம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருது நகர் லைட் ஆஃப் லைப் குழந்தைகள் காப்பகம், சேத்தூர் அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஆகிய 3 காப்பகங்களில் உள்ள 227 ஆதரவற்ற குழந்தைகளுக்கு எம்எல்ஏ தங்கப்பாண்டியன் ரூ.5.18 லட்சம் மதிப்பிலான புத்தாடைகளை வாங்கி கொடுத்தார்.

அனைத்து குழந்தைகளையும் ராஜபாளையத்தில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு அழைத்துச் சென்று அவர்கள் விரும்பிய ஆடைகளை வாங்கி கொடுத்தார். திமுக நகர செயலாளர் ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் காப்பக நிர்வாகிகள் உடனிருந்தனர்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடை வாங்கிக் கொடுத்த முன்னாள் எம்எல்ஏ 
காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது: நவ.2-ல் கோவை, நீலகிரிக்கு கனமழை வாய்ப்பு

X