சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி: அலுவலகங்களை காலி செய்த முன்னாள் அமைச்சர்கள்

ஆட்சிமாற்றம் காரணமாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முன்னாள் அமைச்சர்களின் அறைகள் காலி செய்யப்பட்டு பொருட்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டன. | படங்கள்: ம.பிரபு |

ஆட்சிமாற்றம் காரணமாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முன்னாள் அமைச்சர்களின் அறைகள் காலி செய்யப்பட்டு பொருட்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டன. | படங்கள்: ம.பிரபு |

Updated on
1 min read

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக வெற்றி பெற்​று, நாளை முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்க உள்ள நிலை​யில், தலை​மைச் செயல​கத்​தில் தங்​கள் அலு​வலக அறை​களில் உள்ள பொருட்​களை முன்னாள் அமைச்​சர்​கள் காலி செய்​தனர்.

தமிழக சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தலில் விஜய்​யின் தமிழக வெற்றி கழகம் 108 தொகு​தி​களில் வெற்றி பெற்று தனிப்​பெரும் கட்​சி​யாக ஆட்​சி​யமைக்க உள்​ளது. விஜய் நாளை நேரு உள்​விளை​யாட்​டரங்​கில் நடை​பெறும் நிகழ்​வில் முதல்​வ​ராக பொறுப்​பேற்க உள்​ளார்.

இதற்​கான ஏற்​பாடு​கள் நடை​பெற்று வரும் நிலை​யில், இன்று ஆளுநர் அர்​லேகரை விஜய் சந்​திக்க உள்​ள​தாக கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில், நேற்று தலை​மைச் செயல​கம் மிக​வும் பரபரப்​பாக இயங்​கியது.

ஒரு பக்​கம் தலை​மைச்​செயலர் சாய்​கு​மார் தலை​மை​யில் பதவி​யேற்பு விழாவுக்​கான ஏற்​பாடு​கள் குறித்த ஆலோ​சனை நடை​பெற்று வந்​தது. மற்​றொரு​புறம், அமைச்​சர்​கள் அறை​களை காலி செய்​யும் பணி​கள் நடை​பெற்று வந்​தது.

அறை​களில் உள்ள முதல்​வர் ஸ்டா​லின், துணை முதல்​வர் உதயநிதி படங்​கள், அமைச்​சர்​கள் பயன்​படுத்​திய பொருட்​கள் என அனைத்​தும் காலி செய்​யப்​பட்டு பெட்​டிகளில் அடைத்து அவர​வர் இல்​லங்​களுக்கு அனுப்​பப்​பட்​டன. அலு​வலக கோப்​பு​கள் அனைத்​தும் சம்​பந்​தப்​பட்ட துறை அலு​வல​கங்​களுக்கு கொண்டு செல்​லப்​பட்​டு, அறை​கள் சுத்​தப்​படு​த்தப்பட்டு வருகின்றன.

<div class="paragraphs"><p>ஆட்சிமாற்றம் காரணமாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முன்னாள் அமைச்சர்களின் அறைகள் காலி செய்யப்பட்டு பொருட்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டன. | படங்கள்: <em>ம.பிரபு</em> |</p></div>
​திராவிட கோட்டையில் தவெக போட்ட ஓட்டை: காங்கிரஸ், தேமுதிக, விசிக, பாஜக, தமாகா படுதோல்வியின் பின்னணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in