புதுவையில் தவெகவுடனான கூட்டணி தொடர்பாக கிரீஷ் சோடங்கர் பேசி முடிவு செய்வார்: நாராயணசாமி தகவல்

முன்னாள் முதல்வர் நாராயணசாமி

முன்னாள் முதல்வர் நாராயணசாமி

Updated on
1 min read

புதுச்சேரி: “புதுச்சேரியில் தவெகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக அக்கட்சி தலைமையுடன் பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் பேசி முடிவு எடுப்பார்” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: ”ரேஷனில் வழங்க அரிசி விநியோகத்துக்காக கடந்தாண்டு ஜூன் முதல் ஓராண்டு டெண்டர் விடப்பட்டது. சென்னையிலுள்ள மத்திய அரசு கேந்திரிய பண்டார் நிறுவனம் இந்த டெண்டரை எடுத்தனர். கடந்தாண்டு ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை அரிசி விநியோகிக்கப்பட்டது. அதன் பிறகு அரிசி விநியோகம் நடக்கவில்லை.

கடந்த நவம்பரில் இருந்து இதுவரை அரிசி வரவில்லை. இருப்பினும் அரிசி விநியோகம் செய்யாத கேந்திரிய பண்டார் டெண்டர் ரத்து செய்யப்படவில்லை. இதன் மூலம் ரேஷன் அரிசி டெண்டரில் ஊழல் நடந்துள்ளது தெரிகிறது. இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த அரசையும் சந்தேகிக்கின்றேன். இதனை முறையாக விசாரிக்க வேண்டும். ‘கான்பெட்’-க்கும் கேந்திரிய பண்டாருக்கும் நிறைய தொடர்பு உள்ளது.

கான்பெட் எம்.டி ஐயப்பன், அமுத சுரபிக்கும் எம்.டி-யாகவுள்ளார். அன்மையில் கான்பெட் தொகை ரூ.8 கோடி அமுதசுரபிக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இந்த பணப் பரிமாற்றத்திற்கு அனுமதி தந்தது யார் ?. அரிசி வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதால் துணை நிலை ஆளுநர் தலையிட்டு முழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

புதுச்சேரியில் எப்போது பேரவைத் தலைவர் தேர்தல் நடக்கும், எப்போது அமைச்சர்களுக்கு இலாகா தருவார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. இது கண்டனத்துக்கு உரியது. மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அனைத்து துறைகளும் முடங்கி மக்கள் விரோத ஆட்சிதான் தற்போது நடைபெற்று வருகிறது. என்டிஏ கூட்டணிக்குள் அதிகார சண்டை நடப்பதால், அவர்களை நம்பி வாக்களித்த மக்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

அமைச்சரவை ஒதுக்குவதில் உள்ள பிரச்சினையை கூட்டணிக்குள் பேசி முடிக்காமல் மக்களை துன்பத்திற்கு உள்ளாக்கும் முதல்வர், அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும். புதிதாக அமைந்த என்டிஏ கூட்டணி ஆட்சி செயல்பாட்டுகளை அரிய ஆறு மாதமாவது பார்க்கலாம் என்று நினைத்தோம். போகிற போக்கை பார்த்தால் 6 மாதம் கூட இந்த ஆட்சியாளர்கள் தாண்ட மாட்டார்கள் போல. இந்த அரசுக்கு எதிராக போராட்டத்தை கையில் எடுக்க உள்ளோம்.

புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி தொடர்பாக கட்சி பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் தவெக தலைமையுடன் பேசி சொல்வதாகக் கூறியுள்ளார். அதன் பின்பு முடிவு எடுப்போம். அரசின் ஊழல் விவகாரங்கள் தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவோம்.” என்று நாராயணசாமி கூறியுள்ளார். பேட்டியின்போது இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் நடராஜன் உடனிருந்தார்.

<div class="paragraphs"><p><em>முன்னாள் முதல்வர் நாராயணசாமி</em></p></div>
தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in