தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு எதிரான வழக்கு உள்பட 4 தேர்தல் வழக்குகளில் தமிழக முதல்வர் விஜய், பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் விஜய், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதய ராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நான்கு வழக்குகளும் நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. இதனுடன், வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் மற்றும் சிவராஜ் ஆகியோர் தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்குகளும், அவர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி தேர்தல் வழக்குகள் 6 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, பெரம்பூர், திருச்சி கிழக்கு, வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகளில் முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள்: முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் புகழ் வணக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in