​​தவெக ஆர்ப்பாட்டத்தின்போது காவல் உதவி ஆய்வாளரின் கையை கடித்தவர் உட்பட 5 பேர் கைது

பாலக்கோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது காவல் உதவி ஆய்வாளரின் கையை கடித்த தவெக உறுப்பினர்.

பாலக்கோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது காவல் உதவி ஆய்வாளரின் கையை கடித்த தவெக உறுப்பினர்.

Updated on
1 min read

தரு​மபுரி: பாலக்​கோட்​டில் தவெக சார்​பில் நடந்த ஆர்ப்​பாட்​டத்​தின்​போது காவல் உதவி ஆய்​வாளரின் கையை கடித்​தவர் உட்பட கட்​சி​யினர் 5 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

தரு​மபுரி மாவட்​டம் பாலக்​கோட்​டில் ‘மனமகிழ் மன்​றம்’ என்ற பெயரில் திறக்​கப்​பட்ட தனி​யார் மது​பானக் கடையை மூட வலி​யுறுத்தி தவெக சார்​பில் நேற்று முன்​தினம் ஆர்ப்​பாட்​டம் நடந்​தது.

கட்​சி​யின் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் சிவா தலைமை வகித்​தார். அப்​போது, போலீ​ஸாரின் தடையை மீறி கட்​சி​யினர் மனமகிழ் மன்ற வளாகத்​துக்​குள் நுழைய முயன்​றனர். அவர்​களை போலீ​ஸார் தடுக்க முயன்​ற​போது தள்​ளு​ முள்ளு ஏற்​பட்​டது.

அப்​போது ஒரு இளைஞர் காவல் உதவி ஆய்​வாளர் ஒரு​வரின் கையைக் கடித்​து​விட்டு முன்​னேறி உள்ளே செல்ல முயன்​றார். அதைத் தொடர்ந்​து, முற்​றுகை போராட்​டத்​தில் ஈடு​பட்ட 100 பேரை போலீ​ஸார் கைது செய்து அன்று மாலை​யில் விடு​வித்​தனர்.

இந்​நிலை​யில், உதவி ஆய்​வாளரின் கையைக் கடித்த இளைஞ​ரான பாலக்​கோடு அடுத்த மகேந்​திரமங்​கலம் வீராசனூரைச் சேர்ந்த ஜெமினி (26) மற்​றும் தள்​ளு​முள்​ளு​வில் ஈடு​பட்ட பாப்​பி​நாயக்கன அள்ளி ஜெயப்​பிர​காஷ் (25), பூச்​செட்டி அள்​ளியைச் சேர்ந்த கணேசன் (42), கிருஷ்ணன் (45), வீராசனூர் வினோத்​கு​மார் (35) ஆகிய 5 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இவர்​கள் மீது, போலீ​ஸாரை தாக்​கி, அவர்​களை பணி செய்ய விடா​மல் தடுத்​தது உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்​.

<div class="paragraphs"><p>பாலக்கோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது காவல் உதவி ஆய்வாளரின் கையை கடித்த தவெக உறுப்பினர்.</p></div>
சட்டப்பேரவை தேர்தலில் திருப்பரங்குன்றம் விவகாரம் முக்கியத்துவம் பெறும்: ஹெச்​.​ராஜா கணிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in