தீயணைப்பு ஆணையத் தலைவர் சங்கர் ஜிவால் ராஜினாமா

தீயணைப்பு ஆணையத் தலைவர் சங்கர் ஜிவால் ராஜினாமா
Updated on
1 min read

சென்னை: தமிழக போலீஸ் டிஜிபி​யாக இருந்த சங்​கர் ஜிவால் கடந்த ஆண்டு பணி ஓய்வு பெற்​றார். அப்​போது, திமுக அரசு, ‘தமிழ்​நாடு தீயணைப்பு ஆணை​யம்” என்ற புதிய அமைப்பை உரு​வாக்​கி, அதன் தலை​வ​ராக சங்​கர் ஜிவாலை நியமித்​தது.

இதற்கிடையே, சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக வெற்றி பெற்று விஜய் தமிழக முதல்​வ​ராக பொறுப்​பேற்​றார். இந்​நிலை​யில், தமிழ்​நாடு தீயணைப்பு ஆணைய தலை​வர் பதவி​யில் இருந்து சங்​கர் ஜிவால் ராஜி​னாமா செய்​துள்​ளார்.

இதேபோன்று, திமுக அரசால் நியமிக்​கப்​பட்ட தமிழ்​நாடு சீருடை பணி​யாளர் தேர்வு வாரி​யத்​தின் தலை​வ​ரான ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமாரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தீயணைப்பு ஆணையத் தலைவர் சங்கர் ஜிவால் ராஜினாமா
பினாகினி விரைவு ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு: விரைவு, மின்சார ரயில் சேவை பாதிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in