பினாகினி விரைவு ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு: விரைவு, மின்சார ரயில் சேவை பாதிப்பு

பயணிகள் 3 மணி நேரம் கடும் அவதி
பினாகினி விரைவு ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு: விரைவு, மின்சார ரயில் சேவை பாதிப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை நோக்கி வந்த பினாகினி விரைவு ரயி​லின் பான்​டோகி​ராஃப் சாதனத்​தில் ஏற்​பட்ட தொழில்​நுட்ப கோளாறால், அந்த ரயில் அத்​திப்​பட்டு புதுநகர் - எண்​ணூர் இடையே நடு​வழி​யில் நிறுத்​தப்​பட்​டது.

இதனால், கும்​மிடிப்​பூண்டி - சென்னை மார்க்​கத்​தில் விரைவு, மின்​சார ரயில்​கள் 3 மணி நேரம் தாமத​மானதால்,பயணி​கள் கடும் அவதிப்​பட்​டனர்.

ஆந்​திர மாநிலம், விஜய​வா​டா​வில் இருந்து சென்னை சென்ட்​ரலுக்கு பினாகினி விரைவு ரயில் நேற்று காலை புறப்​பட்​டு, கும்​மிடிப்​பூண்டி - சென்னை மார்க்​கத்​தில் நேற்று பகல் வந்து கொண்​டிருந்​தது.

இந்த ரயில் அத்​திப்​பட்டு புதுநகர் ரயில் நிலை​யத்​துக்​கும், எண்​ணூர் ரயில் நிலை​யத்​துக்​கும் இடையே நண்​பகல் 12.05 மணிஅள​வில் வந்து கொண்​டிருந்​த​போது, ரயி​லின் மேற்​கூரை​யில் உள்ள மின்​சார சேகரிப்பு சாதன​மான பான்​டோகி​ராஃப்​-ல் தொழில்​நுட்பக் கோளாறு ஏற்​பட்​டது.

அதாவது, உயர் அழுத்த மின்​சார கம்​பி​யில் இருந்து இன்​ஜினுக்கு மின்​சா​ரத்தை கடத்​தும் பான்​டோகி​ராஃப் சாதனத்​தில் பழுது ஏற்​பட்​டிருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.இதனால்​,அந்த ரயில் நடு​வழி​யில் நிறுத்​தப்​பட்​டது.

இதையடுத்​து, வடமாநிலங்​களில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில்​களும், புறநகர் ரயில்​களும் ஆங்​காங்கே நிறுத்​தப்​பட்​டன. ரயில்​கள் நிறுத்​தப்​பட்​ட​தால், பயணி​கள் கீழே இறங்கி சிறிது தூரம் நடந்து சென்​று, ஆட்​டோ, பேருந்து என இதர வாக​னங்​கள் மூல​மாக செல்ல வேண்​டிய இடங்​களுக்கு சென்​றனர்.

இதற்​கிடை​யில், ரயில்வே பொறி​யாளர்​கள், ஊழியர்​கள் அங்கு விரைந்து வந்​து, பினாகினி விரைவு ரயி​லின் பான்​டோகி​ராஃப் சாதனத்​தில் ஏற்​பட்​டிருந்த தொழில்​நுட்பக் கோளாறை சரி செய்​யும் பணி​யில் ஈடு​பட்​டனர்​.சு​மார் 3 மணி நேரம் போராடி, பான்​டோகி​ராஃப் சாதனத்​தில் ஏற்​பட்​டிருந்த தொழில்​நுட்​பக்கோளாறை பிற்​பகல் 3.10 மணிக்கு சரிசெய்​தனர்.

இதையடுத்​து, ரயில்​கள் வழக்​கம் போல இயங்​கத் ​தொடங்​கின. விரைவு ரயி​லில் ஏற்​பட்ட கோளாறால், சுமார் 3 மணி நேரம் ரயில்​கள் தாமத​மாகின. இதனால்​, பயணி​கள்​ கடும்​ அவதிப்​பட்​டனர்​.

பினாகினி விரைவு ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு: விரைவு, மின்சார ரயில் சேவை பாதிப்பு
பொது இடத்தில் கஞ்சா புகைத்ததால் விபரீதம்: போலீஸாரை கண்டு அச்சத்தில் ஏரியில் குதித்த இளைஞர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in