விளையாட்டு வீரர்களுக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

விளையாட்டு வீரர்களுக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
Updated on
1 min read

சென்னை: சர்​வ​தேசப் போட்​டிகளில் பங்​கேற்​ப​தற்​காக​வும் விளை​யாட்டு உபகரணங்​கள் வாங்​கு​வதற்​காக​வும் தமிழகத்​தைச் சேர்ந்த 8 விளை​யாட்டு வீரர், வீராங்​க​னை​களுக்கு ரூ.7.85 லட்​சத்​துக்​கான நிதி​யுத​வியை துணை முதல்​வர் உதயநிதி வழங்​கி​னார்.

சர்​வ​தேச போட்​டிகளில் பங்​கேற்​ப​தற்​காக​வும், விளை​யாட்டு உபகரணங்​கள் வாங்​கு​வதற்​காக​வும் சென்​னை​யில் 8 விளை​யாட்டு வீரர், வீராங்​க​னை​களுக்கு ரூ.7.85 லட்​சத்​துக்​கான காசோலைகளை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று வழங்​கி​னார்.

அதன்​படி தேசிய அளவி​லான தடகள போட்​டிகளில் பதக்கம் வென்ற ஜ.கோகுல​பாண்​டியன், வீ.நவீன்​கு​மார், ஜா.சுஜி மற்​றும் கா.​யாமினி ஆகியோ​ருக்கு உபகரணங்​கள் வாங்​கு​வதற்கு ரூ.1.35 லட்​சம், வில்​வித்தை வீரர்​கள் ப.சதீஷ்கு​மார் மற்​றும் ர.பிரதீஷ்வரன் ஆகியோர் உபகரணங்​கள் வாங்​கு​வதற்கு தலா ரூ.1 லட்​சம், பிப்​ர​வரி மாதம் சவுதி அரேபி​யா​வில் நடை​பெறவுள்ள ஆசிய பாரா ரோடு சைக்​ளிங் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் பங்​கேற்​கும் பி.பிரதீப்​புக்கு ரூ.2.50 லட்​ச​மும், ஆசிய ரோடு சைக்​கிளிங் போட்​டி​யில் பங்​கேற்​கும் ர.சஞ்​சய்க்கு ரூ.2 லட்​ச​மும் வழங்​கப்​பட்​டது.

அதைத்​தொடர்ந்​து, கேலோ இந்​தியா கடற்​கரை விளை​யாட்டுப் போட்​டிகளில் பீச் வாலி​பால் பிரி​வில் பதக்​கங்​கள் வென்ற தமிழக வீரர், வீராங்​க​னை​கள் க.தீபி​கா, சு.ப​வித்​ரா, ம.சு​வா​தி, அ.தர்​ஷினி, வி.​ராஜேஷ், பரத், செ.அபிதன், உ.பூந்​தமிழன் ஆகியோர் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லினை சந்​தித்து வாழ்த்து பெற்​றனர்.

இந்​நிகழ்​வில் விளை​யாட்​டுத் துறை செயலர் சத்​யபிரத சாஹு, ஆணைய உறுப்​பினர் செயலர் ஜெ.மேக​நாத ரெட்​டி உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

விளையாட்டு வீரர்களுக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
ரூ.1,000+ கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின்படி நடவடிக்கை எடுக்காதது ஏன்? - ஐகோர்ட் கேள்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in