ரூ.1,000+ கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின்படி நடவடிக்கை எடுக்காதது ஏன்? - ஐகோர்ட் கேள்வி

ரூ.1,000+ கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின்படி நடவடிக்கை எடுக்காதது ஏன்? - ஐகோர்ட் கேள்வி
Updated on
2 min read

சென்னை: நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் பணி​யிடங்​களை நிரப்​பிய​தில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் நடை​பெற்​றுள்​ள​தாக அமலாக்​கத்​துறை அனுப்​பிய ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது டிஜிபி நடவடிக்கை எடுக்​காதது ஏன் என உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்​பி​யது.

தமிழக நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யில் நிரப்​பப்​பட்​டுள்ள 2,538 பணி​யிடங்​களுக்கு தலா ரூ. 25 லட்​சம் முதல் ரூ. 35 லட்​சம் வரை நிர்​ண​யம் செய்து ரூ.1,020 கோடி வரை லஞ்​சம் வாங்கி முறை​கேடு செய்​யப்​பட்​டுள்​ள​தாக டிஜிபிக்கு அமலாக்​கத்​ துறை கடிதம் அனுப்​பியது.

முன்னதாக இந்த குற்​றச்​சாட்​டின் அடிப்​படை​யில் அமைச்​சர் கே.என்​.நேரு, அவரது சகோ​தரர் ரவிச்​சந்​திரன் உள்​ளிட்​டோரின் வீடு​களில் அமலாக்​கத் துறை சோதனை நடத்​தி ஆவணங்​களை பறி​முதல் செய்​தது.

மேலும் அமலாக்கத் துறை கடிதத்​தின் அடிப்​படை​யில் அமைச்சர் கே.என்​.நேரு, அவரது சகோ​தரர் ரவிச்​சந்​திரன் உள்​ளிட்​டோர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்​தர​விட கோரி மதுரையை சேர்ந்த ஆதி​நா​ராயணன் மற்​றும் அதி​முக எம்.பி. இன்​பதுரை ஆகியோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தனித்​தனி​யாக வழக்​கு​களை தொடர்ந்​திருந்​தனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்​த​போது, அமலாக்​கத்​ துறை இயக்​குநர் அனுப்​பிய ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில் லஞ்சஒழிப்புத் துறை போலீ​ஸார் முதல்கட்ட விசா​ரணையை தொடங்​கி​யுள்​ள​தாக அரசு தரப்பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்​ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் ஆஜராகி, ‘‘அமலாக்​கத் ​துறை கடிதத்​தின் அடிப்​படை​யில் முதல்கட்ட விசா​ரணையை நிறைவு செய்ய 180 நாட்​கள் அவகாசம் உள்​ளது.

இந்​நிலை​யில், நேரடி​யாக யார் மீதும் வழக்குப் பதிவு செய்ய முடி​யாது. இந்த வழக்கை தொடர்ந்​துள்ள ஆதி​நா​ராயணன் மீது 6 கொலை, கொலை முயற்சி உள்பட 25 வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. மற்றொரு மனு​தா​ர​ரான இன்​பதுரை, அதிமுக எம்.​பி.தேர்​தல் நெருங்​கும் நேரத்​தில் அரசியல் காழ்ப்​புணர்ச்​சி​யால் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்’’ என வாதிட்டார்.

அப்​போது குறுக்​கிட்ட நீதிப​திகள், ‘‘அரசி​யல்வாதி​கள் என்​றால் வழக்கு தொடரக்​கூ​டாது என உள்​ள​தா மற்​றொரு மனு​தா​ரர் மீது கொலை வழக்​கு​கள் இருந்​தால் அதுதொடர்பாக அவர் விளக்​கம் அளிக்​கட்​டும்’’ என்​றனர்.

அமலாக்​கத் ​துறை தரப்​பில் ஆஜரான சிறப்பு வழக்​கறிஞர் என்.ரமேஷ், ‘‘இந்த விவ​காரத்தில் தமிழக டிஜிபிக்கு கடிதம் மட்​டும் அனுப்​ப​வில்​லை. அனைத்து ஆதா​ரங்​களை​யும் அனுப்பி வைத்​துள்​ளோம். அதன் அடிப்​படை​யில் முதல்கட்ட விசா​ரணை நடத்​தாமல், நேரடி​யாகவே யார் மீதும் வழக்கு பதிவு செய்​ய​லாம். ஆனால், தமிழக போலீ​ஸார் அதைச் செய்​ய​வில்​லை’’ என​ வாதிட்டார்.

டிஜிபி தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் விக்​ரம் கபூர் சவுத்​ரி, ‘‘இந்த வழக்கை தொடர மனு​தா​ரர்​களுக்கு எந்த அடிப்​படை உரிமை​யும் இல்​லை. இரு​வரின் நோக்​கத்​தை​யும், நம்​பகத்​தன்​மை​யை​யும் ஆராய வேண்​டியுள்​ளது. எந்த வழக்​குக்​காக நடத்​தப்​பட்ட சோதனை​யில் ஆதா​ரங்​கள் கிடைத்​த​தாக அமலாக்கத் துறை கூறுகிறதோ, அந்த வழக்கே தற்​போது ரத்து செய்​யப்​பட்டுவிட்​டது’’ என்​றார்.

அதையடுத்து நீதிப​தி​கள், ‘‘அமலாக்​கத் ​துறை அனுப்​பிய ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது டிஜிபி இந்​நேரம் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்​டும். டிஜிபி ஏன் நடவடிக்கை எடுக்​க​வில்​லை’’ என கேள்வி எழுப்​பினர்.

பின்​னர், அதி​முக எம்.பி. இன்​பதுரை தொடர்ந்​துள்ள வழக்​கில் தமிழக அரசும், டிஜிபி​யும் பதில் மனுத் தாக்​கல் செய்ய வேண்​டும். அதே​போல, மற்​றொரு மனு​தா​ர​ரான ஆதி​நா​ராயணன் அரசு தரப்பு குற்​றச்​சாட்டு குறித்து பதில்​மனு தாக்​கல் செய்ய வேண்​டும் என உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை பிப்​.4-க்​கு தள்ளிவைத்தார்.

ரூ.1,000+ கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின்படி நடவடிக்கை எடுக்காதது ஏன்? - ஐகோர்ட் கேள்வி
தொழிலதிபரின் வீட்டில் ரூ.18 கோடி நகைகள் திருட்டு: பெங்களூருவில் நேபாள தம்பதி கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in